Home
Mobile

அமேசான் பிச்சிக்குது.. வெறும் ரூ.11,499 போதும்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. IPS டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி ஏ7 (Redmi A7) மற்றும் ரெட்மி ஏ7 ப்ரோ (Redmi A7 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களில் விற்பனை தொடங்கிவிட்டது. மலிவான விலைக்கு பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை, பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. மேலும், ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட், எம்ஐ.காம் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அமேசான் பிச்சிக்குது.. வெறும் ரூ.11,499 போதும்.. 6300mAh பேட்டரி!

பிளாக் (Black) மற்றும் சன்செட் ஆரஞ்ச் (Sunset Orange) கலர்களில் ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பிளாக் (Black) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) கலர்களில் ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. 2 மாடல்களிலும் ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மட்டுமே கிடைக்கிறது.

ரெட்மி ஏ7 ப்ரோ அம்சங்கள் (Redmi A7 Pro Specifications): 6.9 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் வெட் டச் டெக்னாலஜி 2.0 (Wet Touch Technology) கிடைக்கிறது.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 200 சதவீத சவுண்ட் அவுட்புட் கொண்ட மோனோ ஸ்பீக்கர் (Mono Speaker) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 1 மைக் கிடைக்கிறது. அல்ட்ரா எச்டி மோட் (Ultra HD Mode) கிடைக்கிறது.

மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ ஸ்கை ஸ்கேப்பிங் (AI Sky Scaping) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. IP52 ரேட்டிங்கை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3.0 (HyperOS 3.0) கிடைக்கிறது. 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

சியோமி ஹைப்பர் ஐலேண்ட் (Xiaomi Hyper Island) கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 7.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்மார்ட் சார்ஜிங் என்ஜின் (Smart Charging Engine) கிடைக்கிறது. 8.15 எம்எம் தடிமன் மற்றும் 208 கிராம் எடை கொடுத்துள்ளது.

ரெட்மி ஏ7 அம்சங்கள் (Redmi A7 Specifications): 6.88 இன்ச் (720 x 1640 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் வெட் டச் டெக்னாலஜி கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மோனோ ஸ்பீக்கர் உள்ளது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக், IP52 ரேட்டிங் கிடைக்கிறது. 8.26 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொடுத்துள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 5200mAh பேட்டரி கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது. 2 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi A7 Redmi A7 Pro With UNISOC T7250 Chipset India Sale Started on Flipkart Check Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X