Home
Mobile

தூக்கி பாக்கெட்டில் போடும் விலை.. பட்ஜெட்ல 6300mAh பேட்டரியுடன் 5ஜி ஸ்மார்ட்போன்.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் கிடைத்தால், தூக்கி பாக்கெட்டில் போடலாமே, என்று சொல்லும்படியான தள்ளுபடி விலைக்கு ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (Redmi A7 Pro 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 6300mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கும் இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் சிப்செட் கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 19 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைப்பதால், மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

தூக்கி பாக்கெட்டில் போடும் விலை.. பட்ஜெட்ல 6300mAh பேட்டரியுடன் 5ஜி!

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI A7 Pro 5G Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் பேக் செய்யப்பட்டு உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) டிஸ்பிளே டிசைனில் கிடைக்கிறது. இந்த மலிவான பட்ஜெட்டிலும் வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) கிடைக்கிறது. அதேபோல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core UNISOC T8300 6nm) சிப்செட்டை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

மேலும், மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இருப்பதால், லேட்டஸ்ட் யுஐ கிடைக்கும். 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டை பெற்று கொள்ளலாம். மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் பெற்று கொள்ளலாம்.

ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6300mAh பேட்டரி கிடைக்கிறது. 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஸ்மார்ட் சார்ஜிங் என்ஜின் (Smart Charging Engine) கொண்ட மாடலாக இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்து இருக்கிறது.

IP52 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ரெகல் கேமரா டெகோ (Regal Camera Deco) டிசைன் கிடைக்கிறது. 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் அல்ட்ரா எச்டி மோட் (Ultra HD Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ ஸ்கை (AI Sky) மற்றம் ஏஐ பியூட்டி செல்பீ (AI Beauty Selfie) பீச்சர்கள் உள்ளன.

மேலும், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர் (Bottom Firing Speaker), 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் சிங்கிள் மைக் கொடுத்துள்ளது. இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மிஸ்ட் ப்ளூ (Mist Blue), சன்செட் ஆரஞ்ச் (Sunset Orange) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்கள் கிடைக்கின்றன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
REDMI A7 Pro 5G With Sunset Orange 4GB RAM 64GB Storage Available At 19 Percent Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X