Amazon மிரளுது.. ரூ.11,499 விலையில் 6300mAh பேட்டரி REDMI 5ஜி போன்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026 (Amazon Great Summer Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில், ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (REDMI A7 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்க இருக்கிறது. வருகிற மே 8ஆம் தேதி இந்த விற்பனை தொடங்க இருக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும் இருக்கிறது. மே 8ஆம் தேதி சிறப்பு விற்பனை தொடங்கிய பிறகு ரூ.11,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.500 கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI A7 Pro 5G Specifications): வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) சப்போர்ட் கொண்ட 6.9 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 1600 x 720 பிக்சல்களுடன் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.
பட்ஜெட் மாடலாக கிடைப்பதால், வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) கிடைக்கிறது. இதில் 8 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளது. 32 எம்பி பிரைமரி கேமராவுடன் டூயல் ஏஐ கேமரா (Dual AI Camera) இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி கிடைக்கிறது. ரெகல் கேமரா டெகோ (Regal Camera Deco) டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி கிடைக்கிறது.
அல்ட்ரா எச்டி மோட் (Ultra HD Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) பீச்சர்கள் மற்றும் ஏஐ ஸ்கை (AI Sky), ஏஐ ப்யூட்டி செல்பீ (AI Beauty Selfie) போன்ற ஏஐ பீச்சர்களையும் இந்த கேமரா கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core UNISOC T8300 6nm) சிப்செட்டை கொண்டுள்ளது.
மேலும், 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் பெற்று கொள்ளலாம். மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்கிறது. கூகுள் ஜெமினி (Google Gemini), சர்க்கிள் டூ சர்ச் (Circle To Search) உள்ளது.
சியோமி இன்டர்கனெக்டிவிட்டி (Xiaomi Interconnectivity) பீச்சரும் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமல்லாமல், ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ப்ராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) ஆகியவற்றை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
8.15 எம்எம் தடிமன் பாடியில் 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மொத்தமாக 210 கிராம் எடை வருகிறது. மிஸ்ட் ப்ளூ (Mist Blue), சன்செட் ஆரஞ்ச் (Sunset Orange) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்டை கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications