Home
Mobile

நாளை வெளிவரும் புதிய Redmi 5ஜி போன்.. மலிவு விலை.. 6300mAh பேட்டரி.. 32எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் நாளை (ஏப்ரல் 13) ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (Redmi A7 Pro 5G) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi A7 Pro 5G specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நாளை வெளிவரும் புதிய Redmi 5ஜி போன்.. மலிவு விலை.. எந்த மாடல்?

32எம்பி ரியர் கேமரா உடன் ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியுடன் ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ஆக்டோ கோர் 5ஜி பிராசஸர் (octa-core 5G processor) உடன் ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி வெளிவரும். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor) வசதியுடன் ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளிவரும் புதிய Redmi 5ஜி போன்.. மலிவு விலை.. எந்த மாடல்?

HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.10,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photos credits: amazon, Redmi

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A7 Pro 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X