Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் போடும் ரூ.11000 பட்ஜெட்டில் புது Redmi 5ஜி போன்.. 120Hz டிஸ்பிளே, 6300mAh பேட்டரி, IP52!

ரெட்மி (Redmi) நிறுவனமானது - ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 32-எம்பி டூயல் கேமரா செட்டப், 6300mAh பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்ட - ஒரு புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

எந்த மாடல்? அது ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (Redmi A7 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது இந்தியாவில் இன்று (ஏப்ரல் 13 ஆம் தேதி) அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இது இந்தியாவிற்கு வந்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆளுக்கு 1 ஆர்டர் போடும் ரூ.11000 பட்ஜெட்டில் புது Redmi 5ஜி போன்!

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 32-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. மேலும் இது 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 6,300mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி விலை விவரங்கள்: இந்தியாவில் ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் வேரியண்ட் ரூ.11,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி கலர் ஆப்ஷன்கள் மற்றும் விற்பனை விவரங்கள்: ரெட்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், மிஸ்ட் ப்ளூ மற்றும் சன்செட் ஆரஞ்சு ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும்.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜிஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3
- 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்
- 6 வருட செக்யூரிட்டி பேட்ச்கள்

- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- TUV லோ ப்ளூ லைட் சான்றிதழ்
- 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
- 6என்எம் ஆக்டா-கோர் யுனிசாக் டி8300 ப்ராசஸர்
- 4ஜிபி LPDDR4x ரேம்
- 128ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்

- கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சேர்ச் போன்ற ஏஐ அம்சங்கள்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/2.0 அபெர்ச்சர் கொண்ட 32-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சார்
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 5, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யுஎஸ்பி ஓடிஜி மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் திறனான IP52 ரேட்டிங்
- 15W வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 7W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 6300mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A7 Pro 5G Launched in India Price Starts Rs 11499 Sale Starts From April 15 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X