அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.7,499 போதும்.. 8GB ரேம்.. 5200mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிரீமியம் டிசைனில் 5200mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 32 எம்பி கேமரா, 120Hz டிஸ்பிளே, 2 ஜெனரேஷன் ஓஸ் அப்டேட் போன்ற பீச்சர்களுடன் வெளியான ரெட்மி ஏ5 (Redmi A5) விற்பனையானது பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ரெட்மி ஏ5 போனின் முழு பீச்சர்களையும், விற்பனை விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பட்ஜெட்டைவிட கூடுதலாக பிரீமியம் லுக்கை இது கொடுக்கிறது. இந்த போனை பாண்டிச்சேரி ப்ளூ (Pondicherry Blue) கலரில் வாங்கலாம். மேலும், ஜெய்சல்மேர் கோல்டு (Jaisalmer Gold) மற்றும் ஜஸ்ட் பிளாக் (Just Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8.2 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் மற்றும் கேப்சூல் ஷேப்டு கேமரா பம்ப் கொடுக்கிறது. மெட்டாலிக் பினிஷிங்-லைக் மிடில் ஃபிரேம் கிடைக்கிறது.

ரெட்மி ஏ5 பிளிப்கார்ட் விற்பனை (Redmi A5 Flipkart Sale): இந்த ரெட்மியின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.6,499 ஆக இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.7,499 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு என்னென்ன பீச்சர்களை கொடுக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி ஏ5 அம்சங்கள் (Redmi A5 Specifications): இந்த ரெட்மியில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த வாட்டர் டிராப் நாட்ஜ் டிஸ்பிளே மாடலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
இதுபோன்ற அடிமட்ட பட்ஜெட்டில் லேட்டஸ்ட் ஓஎஸ் எதிர்பார்க்க முடியாது. அப்படியே கிடைத்தாலும் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்காது. ஆனால், இந்த ரெட்மி ஏ5 போனில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், அதற்கு இரண்டு ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களும் (OS Updates) கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோக 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் (Security Updates) வருகின்றன. மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படியான ஆக்டா கோர் 12எம்எம் யுனிசோக் டி7250 (Octa Core 12nm UNISOC T7250) கிடைக்கிறது. இருப்பினும், 4 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது.
இந்த ரெட்மி ஏ5 போனில் 32 எம்பி மெயின் + செகண்டரி லென்ஸ் கொண்ட ரியர் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை பேக் செய்துள்ளது. இந்த கேமராவில் ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters) மற்றும் மற்றும் ஃபிலிம் ஃபிரேம்கள் (Film Frames) கிடைக்கின்றன. மேலும், எச்டிஆர் மோட் (HDR Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) வருகிறது.
1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 30 எப்பிஎஸ் சப்போர்ட் கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், அதற்கான சார்ஜர் கிடைக்கிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங்குக்கு ஏற்றபடி 5200mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது. ஏஐ ஃபேஸ் அன்லாக், சைடு ஃபேசிங் ஃபிங்கர்பிரிண்ட் செக்யூரிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








