Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.6,499 போதும்.. 5200mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 2TB மெமரி.. 32MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் பிரியர்கள் விரும்படியான விலையில் எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே, 32 எம்பி டூயல் கேமரா சிஸ்டம், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5200mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், போன்ற பீச்சர்களுடன் ரெட்மி ஏ5 ((Redmi A5) வெளியாகி இருக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெரிய டிஸ்பிளேவை கொடுக்கும் இந்த ரெட்மி ஏ5 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி ஏ5 அம்சங்கள் (Redmi A5 Specifications): இந்த ரெட்மி மாடலில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆனால், அடிமட்ட பட்ஜெட்டில் கிடைப்பதால், ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12எம்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.6,499 போதும்.. 5200mAh பேட்டரி.. 15W சார்ஜ்!

3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரேம் கம்மியாக இருந்தாலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) இந்த போனில் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி ஏ5 போனில் 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 32 எம்பி டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்க்க முடியாததான். ஆனால், இந்த ரெட்மி போன் 5200mAh பேட்டரி மட்டுமல்லாமல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது. பேட்டரியுடன் 8.26 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொண்டிருக்கிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ரெட்மி ஏ4 போனானது 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியுடன் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் உள்ளது.

ஜெய்சல்மேர் கோல்டு (Jaisalmer Gold), பாண்டிச்சேரி ப்ளூ (Pondicherry Blue) மற்றும் ஜஸ்ட் பிளாக் (Just Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆகவும் இருக்கிறது. ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

பிளிப்கார்ட் (Flipkart), எம்ஐ.காம் (mi.com) மற்றும் சியோமி ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 4ஜி ஸ்மார்ட்போன் தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்கள் இந்த ரெட்மி ஏ4 போனை ஆப்ஷனில் எடுக்கலாம். பர்பஃபாமென்ஸ் பட்ஜெட்டுக்கு ஏற்ப மட்டுமே இருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A5 With 32MP Camera Launched Sale From April 16 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X