விட்ராதீங்க சார்.. ரூ.7000 போதும்.. 5200mAh பேட்டரி.. IPS டிஸ்பிளே.. 15W சார்ஜிங்.. 32MP கேமரா.. எந்த மாடல்?
வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் 5200mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 32 எம்பி கேமரா, ஐபிஎஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ரெட்மி ஏ5 (Redmi A5) போன் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் போக்கோ சி71 (POCO C71) மாடலாக களமிறங்க இருக்கும் இந்த போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் இந்த ரெட்மி ஏ5 வெளியாகி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் விலை இருப்பதால், இந்தியாவில் இருக்கும் பட்ஜெட் பிரியர்களிடையே இந்த போனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. ஆனால், இந்திய மார்கெட்டில் போக்கோ சி71 மாடலாக இந்த போன் வெளியாக இருக்கிறது. இந்த போக்கோ மாடலின் குறிப்பிட்ட பீச்சர்கள் ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது.

இந்த நேரத்தில் ரெட்மி ஏ5 போன் வெளியாகி முழு பீச்சர்களும் எப்படி இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. போக்கோ சி71 போனானது ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக இருப்பதால், அதே சூட்டில் குளோபல் மார்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனால், பேக் பேனல் டிசைனில் மட்டும் போக்கோ சி71 அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. முதலில் ரெட்மி ஏ5 போனின் பீச்சர்களை பார்ப்போம்.
ரெட்மி ஏ5 அம்சங்கள் (Redmi A5 Specifications): இந்த ரெட்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கோ எடிஷன் (Android 15 Go Edition) கொண்ட ஆக்டா கோர் 12என்எம் யுனிசோக் டி7250 (Octa Core 12nm UNISOC T7250) சிப்செட் கிடைக்கிறது. 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. 2டிபிக்கா மைக்ரோஎஸ்டி சிலாட் கிடைக்கிறது.
6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஐபிஎஸ் (IPS) மாடலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இந்த ரெட்மி ஏ5 போனில் 32 எம்பி மெயின் கேமா + செகண்டரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி பெரிய 5200mAh பேட்டரி கிடைக்கிறது. லேக் கிரீன் (Lake Green), மிட்நைட் பிளாக் (Midnight Black), சாண்டி கோல்டு (Sandy Gold) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ரெட்மி ஏ5 போனின் ஆரம்ப விலை ரூ.6,750 பட்ஜெட்டில் இருக்கிறது. இதே பட்ஜெட்டில் போக்கோ சி71 போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.
இதை போக்கோ நிறுவனமே உறுதி செய்துள்ளது. இந்த போக்கோவில் ரேம், டிசைனில் அப்கிரேட்கள் இருக்கின்றன. அதாவது, 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட வேரியண்ட் இங்கு வெளியாக இருக்கிறது. அதேபோல கூல் ப்ளூ (Cool Blue), பவர் பிளாக் (Power Black) மற்றும் டெசர்ட் கோல்டு (Desert Gold) ஆகிய கலர்களில் இங்கு வெளியாக இருக்கிறது.
2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 ஜெனரேஷன் செக்யூரிட்டி அப்டேட்களை இந்த போக்கோ சி71 கொடுக்க இருக்கிறது. மற்ற பீச்சர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இந்த பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை போக்கோ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆகவே, ஏப்ரல் 4ஆம் தேதி இந்த போக்கோ சி71 போன் பட்டையை கிளப்ப இருக்கிறது.


Click it and Unblock the Notifications








