Home
Mobile

மலிவு விலை.. அறிமுகமானது புதிய Redmi போன்.. 5200mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி ஏ5 (Redmi A5) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது இந்த போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய ரெட்மி போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி ஏ5 அம்சங்கள் (Redmi A5 specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1640 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைடன்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலை.. அறிமுகமானது புதிய Redmi போன்.. எந்த மாடல்?

அதேபோல் யுனிசாக் டி7250 (Unisoc T7250) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 15 (கோ எடிஷன்) மூலம் இந்த ரெட்மி போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஏஜி ஃப்ரோஸ்டட் கிளாஸ் (AG frosted glass) மற்றும் ஓவல் வடிவ ( oval-shaped) கேமரா உள்ளது. குறிப்பாக இந்த போனின் பின்புறம் 32எம்பி கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போனில் AI facial recognition ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 196 கிராம் ஆகும். பின்பு மிட்நைட் பிளாக் (Midnight Black), சாண்டி கோல்ட் (Sandy Gold), லேக் கிரீன் (Lake Green) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் 5200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது. 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.2, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனின் விலை $72 (இந்திய மதிப்பில் ரூ.6,166) ஆக உள்ளது. அதேபோல் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் போக்கோ சிஎப்1 (Poco C71) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A5 launched in Indonesia: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X