ஆளுக்கு 2 ஆர்டர் விழுது.. ரூ.5999க்கு 5200mAh பேட்டரி Redmi போன் அறிமுகம்.. Airtel சிம் யூஸ் பண்ணா ரூ.750 OFF!
ரெட்மி (Redmi) நிறுவனம் மீண்டும் ஏர்டெல் (Airtel) உடன் இணைந்து - பட்ஜெட் விலையில் ஒரு புதிய "பிரத்யேக" ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. அது ரெட்மி ஏ5 ஏர்டெல் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் (Redmi A5 Airtel Exclusive Edition ) ஆகும்.
பெயர் குறிப்பிடுவது போலவே இது கடந்த ஆண்டு அறிமுகமான ரெட்மி ஏ4 ஏர்டெல் எடிஷனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வருகிறது. இது முன்னதாக அறிமுகமான ரெட்மி ஏ5 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்களைத்தான் பேக் செய்யும். ஆனால் ஏர்டெல் கஸ்டமர்களுக்கான ஸ்பெஷல் சலுகைகளை வழங்கும்.

அதாவது இந்த எக்ஸ்க்ளூசிவ் எடிஷனை வாங்குபவர்கள் அதில் ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம்மை பயன்படுத்த வேண்டும். பின்னர் ஏர்டெல்லின் ட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களில் ஒன்றை - அதாவது ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்வதன் மூலம் அதை குறைந்தது 18 மாதங்களுக்கு ஆக்டிவ் ஆகவும் வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதற்கு ஈடாக, ஏர்டெல் நிறுவனம் உங்களுக்கு சில பிரத்யேக நன்மைகளை வழங்கும்.
அதன் கீழ் 7.5 சதவீத தள்ளுபடி (ஸ்டிக்கர் விலையில் ரூ.750 வரை தள்ளுபடி) மற்றும் 50 ஜிபி இலவச டேட்டா போன்றவைகள் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற சிங்கிள் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கும்.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், ரெட்மி ஏ5 ஏர்டெல் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் ஸ்மார்ட்போனை, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் வழியாக வாங்கலாம். இது ஜெய்சால்மர் கோல்ட் (Jaisalmer Gold), ஜஸ்ட் பிளாக் (Just Black) மற்றும் பாண்டிச்சேரி ப்ளூ (Pondicherry Blue) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி ஏ5 ஏர்டெல் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: முன்னாடி குறிப்பிட்டபடி, ஸ்டாண்டர்ட் ரெட்மி ஏ5 மாடலுக்கும் இதற்கும் இடையே அம்சங்கள் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருக்காது. ரெட்மி ஏ5 4ஜி ஸ்மார்ட்போனை போலவே இதுவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 32எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 15W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5200mAh பேட்டரி வரும் இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ரீடர், ஐபி52 ரேட்டிங் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ4 ஸ்மார்ட்போனில் 5ஜி வேரியண்ட்டும் உள்ளது. இது டூயல் சிம் ஆதரவு உடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) உடன் வருகிறது கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 5 மெகாபிக்சல் கேமரா (எப்/2.2 அபெர்க்ஷர்) உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசானில் இது ரூ.7499 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








