ரூ.7499 ஆபர் விலையில் கிடைக்கும் Redmi போன்.. 32MP AI கேமரா, 5200mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15.. எந்த மாடல்?
அதிவேக 5ஜி நெட்வொர்க் மீதும், 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதும் உங்களுக்கு இன்னும் ஆர்வம் வரவில்லை என்றால், புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான உங்களுடைய தேடல் 4ஜி மாடல்கள் மீது மட்டுமே உள்ளதென்றால்.. குறிப்பாக ரூ.8000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல 4ஜி ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது விஜய் சேல்ஸ் வலைத்தளத்திற்கு தான்.
ஏனென்றால் அங்குதான், ரெட்மி நிறுவனத்தின் ஒரு தரமான 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.7,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அது ரெட்மி ஏ5 4ஜி (Redmi A5 4G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது விஜய் சேல்ஸ் வலைத்தளத்தில் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 25% தள்ளுபடியை பெற்று ரூ.9,999 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இஎம்ஐ விருப்பங்கள் ஆனது மாதத்திற்கு ரூ.364 க்கு (12 மாத இஎம்ஐ) வாங்க கிடைக்கிறது.

ரெட்மி ஏ5 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ப்ராசஸர்
- 8ஜிபி வரை ரேம்
- 32எம்பி AI டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8எம்பி செல்பீ கேமரா
- 5200mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
ஒருவேளை ரூ.7500 கொடுத்து வாங்குறதே வாங்குறோம், பேசாமல் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கினால் என்ன என்கிற யோசனை உங்களுக்குள் பிறந்தால், இதே ரெட்மி ஏ சீரிஸின் கீழ் முன்னர் வெளியான ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது இது ரூ.8299 க்கு வாங்க கிடைக்கிறது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்ள்: ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) உடன் வருகிறது
கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 5 மெகாபிக்சல் கேமரா (எப்/2.2 அபெர்க்ஷர்) உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக (Free 33W Charger) அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications