மார்க்கெட்டே திணறப்போகுது.. ரூ.10000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது Redmi 5ஜி போன்..
ரெட்மி (Redmi) நிறுவனம் இந்தியா மொபைல் காங்கிரஸ் ( IMC) 2024 நிகழ்வில் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதாவது ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) என்று அழைக்கப்படும் போனுக்கு தான் இந்த தரமான சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (Snapdragon 4s Gen 2) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.52-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ரெட்மி போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது ரெட்மி ஏ4 5ஜி போன். மேலும் இந்த போனில் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் டூயல் 5ஜி சிம் ஆதரவு, புளூடூத் 5.1, டூயல் பேண்ட் வைஃபை 5, என்எப்சி, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்விட்டி ஆதரவுகள் உள்ளன.
ஆனால் ரெட்மி நிறுவனம் இந்த புதிய ரெட்மி ஏ4 5ஜி போனின் விற்பனை தேதியை அறிவிக்கவில்லை. குறிப்பாக இந்த போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.
photo credit: xiaomitime, redmi


Click it and Unblock the Notifications








