Home
Mobile

அமேசான் மிரளுது.. வெறும் ரூ.9999 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. 6GB ரேம்.. எந்த மாடல்?

இந்தியாவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) போனின் புதிய ரேம் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலையில் 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் கொண்ட இந்த ரெட்மி ஏ4 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் மட்டுமே இந்திய மார்கெட்டில் வெளியாகின. இந்த பட்ஜெட்டில் பேட்டரி, சிப்செட் மற்றும் கேமரா பீச்சர்கள் பக்காவாக கிடைத்ததால், கூடுதல் ரேம் வேரியண்ட் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப இப்போது, 6 ஜிபி ரேம் வேரியண்ட் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

அமேசான் மிரளுது.. வெறும் ரூ.9999 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை தொடங்கிவிட்டது. இப்போது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. முன்னதாக வெளியான 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,799ஆகவும் இருக்கிறது. ரூ.9,450 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.

ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): இந்த ரெட்மி போன் 8 மாதங்கள் பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மட்டுமே வருகிறது. இருப்பினும், 2 ஓஎஸ் அப்டேட்கள் கிடைப்பதால், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களை பெற்று கொள்ளலாம். பட்ஜெட்டுக்கு ஏற்ற சிப்செட் உள்ளது.

ஆகவே, அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் 2 4என்எம் (Octa Core Snapdragon 4s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த ரெட்மி ஏ4 5ஜி போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், வாட்டர் டிராப் நாட்ஜ் கிடைக்கிறது. 1080p வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப 5 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. இதிலும் 1080p வீடியோ ஷூட் செய்து கொள்ளலாம்.

இந்த ரெட்மி ஏ4 5ஜி போனில் 5160mAh பேட்டரி மற்றும் 18W சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 8.22 மிமீ தடிமன் மற்றும் 212.35 கிராம் எடை வருகிறது. மோனோ ஸ்பீக்கர் (Mono Speaker), 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. ஸ்டார்ரி பிளாக் (Starry Black) & ஸ்பார்க்கிள் பர்ப்பிள் (Sparkle Purple) கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A4 5G With 6GB RAM Variant Available For Purchase in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X