Home
Mobile

அடிச்சான் பாரு அமேசான்.. வெறும் ரூ.8,748 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் அசத்தலான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இப்போது, ஆர்டர் செய்தால், மார்கெட் விலையில் இருந்து கம்மியாக வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலை போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, அமேசானில் (Amazon) 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு 27 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, இப்போது ஆர்டர் செய்தால் ரூ.8,798 பட்டஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல ரூ.8,350 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

அடிச்சான் பாரு அமேசான்.. வெறும் ரூ.8,748 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி!

இந்த விலைக்கு 5ஜி மாடலாக கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,998ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.9,799ஆகவும் இருக்கிறது. இவற்றுக்கும் முறையே 27 சதவீதம் மற்றும் 25 சதவீத தள்ளுபடி அமேசான் தளத்தில் கொடுக்கப்படுகிறது.

ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டும், அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்துள்ளது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் பெற்று கொள்ளலாம்.

வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop Notch) கொண்ட 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதுவொரு 5ஜி மாடலாக இருப்பதால், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் 2 4என்எம் (Octa Core Snapdragon 4s Gen 2 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே எதிர்பார்க்க முடியும். இருப்பினும், 2 ஓஎஸ் அப்டேட்களை கொடுப்பதாக ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கம்மியான பட்ஜெட்டடில் ஓரளவுக்கு பெரிய 5160mAh பேட்டரி கிடைக்கிறது.

அதேபோல 10W சார்ஜிங் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து இருக்கிறது. அதேபோல 13 எம்பி அல்லது 32 எம்பி போன்ற மெயின் கேமராவே இதுபோன்ற பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும். ஆனால், இந்த ரெட்மி ஏ4 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதற்கு செகண்டரி கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.

இந்த ரெட்மியில் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது. ஆகவே, நானோ சிம் சிலாட் + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. இதில் 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் இருக்கின்றன.

பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைனில் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) மற்றும் ஸ்பார்க்கிள் பர்ப்பிள் (Sparkle Purple) ஆகிய 2 கலர்களில் மட்டுமே ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ரவுண்ட் கேமரா பம்ப் கிடைக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், 8.22 மிமீ தடிமனில் பாடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A4 5G With 50MP Camera Available At Discounted Price on Amazon Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X