ஆர்டருக்கு மேல ஆர்டர்.. வெறும் ரூ.8000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஆர்டருக்கு மேல ஆர்டர் குவியும்படியான பட்ஜெட்டில் ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.10000 பட்ஜெட்டை விட மலிவாக கிடைக்கும் இந்த ரெட்மி போனில் 50 எம்பி கேமரா, 5160mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற ரூ.15000 மதிப்பிலான மொபைலுக்கு நிகரான பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ரெட்மி ஏ4 5ஜி போனின் முழு பீச்சர்கள் எப்படி இருக்கிறது? விலை மற்றும் விற்பனை விவரங்கள் எப்படி?
ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): பிரீமியம் லுக் கொடுக்கும் டூயல் டோன் பேனலுடன் ஸ்பார்கிள் பர்பிள் (Sparkle Purple) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. வாட்டர்டிராப் நாட்ஜ் (Waterdrop Notch) டிசைனில் 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த எல்சிடி பேனலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு யுனிசோக் சிப்செட் மட்டுமே பெரும்பாலான மாடல்களில் கிடைக்கும். ஆனால், இந்த ரெட்மி ஏ4 5ஜி போனில் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 4s Gen 2) மொபைல் சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மாலிக்கு பதிலாக அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ரெட்மியில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சியோமின் ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) பேக் செய்யப்பட்டு இருக்கிறது. 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Dynamic RAM) பயன்படுத்தலாம். மெமரிக்கு 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வழங்கப்பட்டு இருக்கிறது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அல்லது 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ரெட்மி ஏ4 5ஜி போனில் ரிங் டயல் டிசைனில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 1080P வீடியோ ரெக்கார்டிங்குடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் இடம்பெற்றுள்ளது.
அதேபோல 1080P வீடியோ ரெக்கார்டிங்குடன் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters) மற்றும் ஃபிலிம் ஃபிரேம் (Film Frame) போன்ற கேமரா பீச்சர்கள் இருக்கின்றன. மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் வழங்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி சிஸ்டம் இருக்கிறது.
ஆகவே, இந்த ரெட்மி ஏ4 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5160mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி 5ஜி கனெக்டிவிட்டி கொடுப்பதால், 5ஜி எஸ்ஏ (5G SA) வருகிறது. மேலும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது. 8.22 மிமீ தடிமன் மற்றும் 212 கிராம் எடையில் ஓரளவுக்கு ஸ்லிம் பாடி கொடுக்கிறது. 3.5 எம்எம் இயர்போன் ஜாக், சைடு பேசிங் பிங்கர்பிரிண்ட் உள்ளது.
இந்த ரெட்மி ஏ4 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,499ஆக இருக்கிறது. அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,499ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்கள் பெட்டராகவே இருக்கின்றன. ரூ.10000 பட்ஜெட்டில் இந்த ரெட்மி ஏ4 5ஜி நல்ல ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








