Home
Mobile

மிரளுது அமேசான்.. ரூ.8,499 ஆஃபரில் 5ஜி போன்.. 5160mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடக்கும் பிளாக் ஃப்ரைடே சேலில் (Black Friday Sale) ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் மார்கெட் விலையைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் கேமரா, 5160mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களை இந்த ரெட்மி போன் கொடுக்கிறது.

29 சதவீத டிஸ்கவுண்ட் போக 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.8,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெட் கார்டுக்கு கூடுதலாக கேஷ்பேக் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ள முடியும். இதுபோக ரூ.8,050 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையைும் அமேசான் கொடுக்கிறது.

மிரளுது அமேசான்.. ரூ.8,499 ஆஃபரில் 5ஜி போன்.. 5160mAh பேட்டரி.. 50MP!

ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1600 x 720 பிக்சல் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனுடன் 6.88 இன்ச் எல்சிடி டிஸ்பிளே (LCD Display) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ள ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது.

மேலும், அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்ட் மற்றும் ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) கொண்டுள்ளது. 128 ஜிபி மெமரிக்கு மேல் கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. அதோடு டூயல் நனோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டுள்ளது. இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது

ஆகவே, 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொடுக்கிறது. 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொடுக்கிறது. 5160mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட மாடலாக இந்த ரெட்மி ஏ4 5ஜி இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.22 மிமீ தடிமனை கொடுத்துள்ளது. மொத்தமாக 212.35 கிராம் எடை கொடுக்கிறது. ஆகவே, ஸ்லிம் மாடலாக இருக்காது.

பட்ஜெட் விலைக்கு ஏற்ப சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio) கொடுக்கிறது. 5ஜி எஸ்ஏ (5G SA) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11) மற்றும் ப்ளூடூக் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது.

இதுபோக ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) கனெக்டிவிட்டி உள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கிடைக்கும். இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் 2 கலர்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன. ஸ்டார்ரி பிளாக் (Starry Black) மற்றும் ஸ்பார்க்கிள் பர்பிள் (Sparkle Purple) ஆகிய 2 கலர்களில் அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

மேலும், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமல்லாமல், அதற்கு பிறகு 2 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. அதேபோல 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் பெற்று கொள்ளலாம். 18W சார்ஜிங் வந்தாலும் 33W சார்ஜர் பாக்ஸில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A4 5G With 4GB RAM Available Under Rs 9000 in Amazon Black Friday Sale Check Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X