மொத்த இந்தியாவும் ஆர்டர் போடுது.. ரூ.8499 புது 5G போன்.. 8GB ரேம், 50MP கேம், 120Hz டிஸ்பிளே, 5160mAh பேட்டரி!
ஆரம்பத்தில் ரூ.10,000 குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன், கடந்த வாரம் இந்தியாவில் வெறும் ரூ.8,499 க்கு அறிமுகமாகி இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (நவம்பர் 27 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.
இந்திய சந்தையில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.8,499 க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.9,499 க்கும் வாங்க கிடைக்கும். இவ்விரு ஆப்ஷன்களுமே விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன் வருகின்றன. இதன்கீழ் இன்டர்னல் ஸ்டோரேஜ் வழியாக 4ஜிபி ரேம்-ஐ 8ஜிபி ரேம் ஆக அதிகரிக்க முடியும்.

ஸ்பார்க்கிள் பர்பிள் (Sparkle Purple) மற்றும் ஸ்டாரி பிளாக் (Starry Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று (நவம்பர் 27 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல், ரெட்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்.
இந்தியாவிலேயே மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருந்தாலும் கூட ரெட்மி ஏ4 5ஜி மாடலானது 8ஜிபி ரேம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5160எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
விரிவான அம்சங்களை பொறுத்தவரை இது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) உடன் வருகிறது
கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 5 மெகாபிக்சல் கேமரா (எப்/2.2 அபெர்க்ஷர்) உள்ளது.
சுவாரசியமாக இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் வருகிறது. இதற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.10,000 க்குள் என்கிற விலையில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு எந்த விதமான சாப்ட்வேர் சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டை பயன்படுத்தி 1டிபி வரையிலான எக்ஸ்டென்ஷன், ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஐபி52 ரேட்டிங் போன்ற்வைகளையும் கொண்டுள்ளது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஒருபக்கம் இருக்க ஷாவ்மீ நிறுவனம் அதன் ரெட்மி நோட் 14 சீரீஸ் (Redmi Note 14 Series) ஸ்மார்ட்போன்களை வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்கீழ் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,990 முதல் தொடங்கலாம். அடுத்ததாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல் ரூ.16,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது ரூ.22,990 க்கு வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications