இதை விட்றாதீங்க.. ரூ.7999 க்கு Redmi போன்.. 5ஜி, 1TB மெமரி, 5160mAh பேட்டரி, 50MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025-ன் (Amazon Freedom Festival Sale 2025) கீழ் ரெட்மி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் (Redmi 5G Smartphone) ஒன்று ரூ.8000 க்கும் குறைவான விலையில், அதாவது ரூ.7999 க்கு வாங்க கிடைக்கிறது. அது என்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இன்னன்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைதளத்தில் நடக்கும் சுதந்திர தின சலுகையின் ஒரு பகுதியாக அதன் எம்ஆர்பி விலையான ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.3000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்ள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு வரும் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (LCD Display) கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி எல்பிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) மூலம் இயக்கப்படுகிறது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உடன் வருகிறது. இதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா ஒன்றும் உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை இது 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் (Smartphone Retail Box) ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 128ஜிபி வரையிலான யுஎப்எஸ் 2.2 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. சுவாரசியமாக இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (Micro SD Card Slot) பயன்படுத்தி 1டிபி வரை நீட்டிக்கவும் முடியும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 5, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேலும் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (Finger Print Scanner) கொண்டுள்ளது. கூடவே தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 rating) கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீடுகளில் 171.88x77.80x8.22மிமீ உள்ளது மற்றும் எடையில் 212.35 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








