பரபரப்பான மார்கெட்.. ரூ.8499 க்கு வந்த புது Redmi 5G போன்.. இலவச 33W சார்ஜர், 120Hz டிஸ்பிளே, 5160mAh பேட்டரி!
சொன்னபடியே ரெட்மி நிறுவனம், இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. நேற்றுவரை இது ரூ.10,000 குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,499 க்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த இந்திய மொபைல் சந்தையையும் உலுக்கியுள்ளது.
ரூ.8,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5160mAh பேட்டரி, ஷாவ்மீ நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் உடனான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்ள்: ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) உடன் வருகிறது
கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 5 மெகாபிக்சல் கேமரா (எப்/2.2 அபெர்க்ஷர்) உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக (Free 33W Charger) அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. சுவாரசியமாக இதன் ஸ்டோரேஜை மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டை பயன்படுத்தி 1டிபி வரை நீடிக்கவும் முடியும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 5, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேலும் இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது மற்றும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 rating) கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீடுகளில் 171.88x77.80x8.22மிமீ உள்ளது மற்றும் எடையில் 212.35 கிராம் உள்ளது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.8,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.9,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பார்க்கிள் பர்பிள் (Sparkle Purple) மற்றும் ஸ்டாரி பிளாக் (Starry Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி முதல் ரெட்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








