இந்தியாவிலேயே மிகவும் மலிவான 5G போன்.. வெறும் ரூ.8499-க்கு Redmi ருத்ர தாண்டவம்.. என்ன மாடல்?
இந்திய சந்தையில் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை (India's Most Affordable 5G Smartphone) விற்பனை செய்ய ரெட்மி நிறுவனம் தயார் நிலையில் உள்ளது. ஐஎம்சி 2024 (IMC 2024) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2024 (Indian Mobile Congress 2024) நிகழ்வில் ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என்கிற சூழ்நிலையில், இதன் விற்பனை விலை நிர்ணயம் லீக் ஆகி.. பட்ஜெட்வாசிகளை இன்ப அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. ரெட்மி ஏ4 5ஜி அப்படி என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

இந்தியாவில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? ஸ்மார்ட்ப்ரிக்ஸ் (Smartprix) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அறிமுக சலுகைகளுக்கு பிறகு ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கலாம். அதாவது சலுகைகள் இல்லாமல், இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் (ஆனாலும் ரூ,10,000-ஐ தாண்டாது)
நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ3 4ஜி ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,299 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.8,299 ஆகவும் உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் ஏ4 ஆனது ஏ3 மாடலை விட விலை அதிகமாக இருக்கிகிறதே என்று தோன்றும். ஆனால் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்த்த பின்னர்.. அந்த எண்ணமே உங்களுக்கு வராது!
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இது "ஒவ்வொரு இந்தியருக்கும் 5ஜி" என்ற நோக்கத்துடன் வருகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 எஸ்ஓசி (4nm Snapdragon 4s Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது.
இது ரெட்மி ஏ3 மற்றும் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன்களில் உள்ள 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் (12nm MediaTek Helio G36) உடன் ஒப்பிடும் போது, மிகப்பெரிய அப்கிரேட் ஆகும். ரெட்மி ஏ4 5ஜி மாடலில் உள்ள புதிய சிப் கார்டெக்ஸ் ஏ78 செயல்திறன் கோர்களை பயன்படுத்துகிறது, அதே சமயம் ஹீலியோ ஜி36 ஆனது பழைய மற்றும் பலவீனமான கார்டெக்ஸ் ஏ53 கோர்களை கொண்டுள்ளது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அனுப்பப்படலாம். ரேம்-ன் தரநிலை LPDDR4x ஆகவே உள்ளது; ஆனால இன்டர்னல் ஸ்டோரேஜின் தரநிலையானது வேகமான UFS 3.1 வகைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவானது பழைய மாடல்களில் உள்ள அதே 5,000mAh ஆக இருந்தாலும் கூட, ரெட்மி ஏ3 மாடலில் உள்ள 10W அடாப்டரில் இருந்து ஏ4 மாடலின் சார்ஜிங் ஸ் ஸ்பீட் 18W ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக செயல்திறன் மற்றும் 5ஜி ஆகிய இரண்டும் சேர்ந்து ஸ்மார்ட்போனின் பேட்டரியை விரைவாக காலி செய்துவிட்டால். மீண்டும் விரைவாக சார்ஜ் செய்ய 18W ஏதுவாக இருக்கும்
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி பேனலாக இருக்கலாம்; அதாவது ரெட்மி ஏ3 4ஜி மாடலில் இருக்கும் அதே டிஸ்பிளேவை தான் கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி ப்ரைமரி கேமரா + அறியப்படாத இரண்டாம் நிலை ஷூட்டரை கொண்டுள்ளது. முன்பக்க கேமராவாக 8எம்பி செல்பீ சென்சார் உள்ளது. இந்த கேமரா செட்டப் ஆனது ரெட்மி ஏ3 மாடலில் நாம் கண்ட 8எம்பி + 0.08எம்பி சென்சார்களுடன் ஒப்பிடும் போது ஒரு நல்ல மேம்படாகும். (Photo Credits: Ishan Agarwal @ishanagarwal24)


Click it and Unblock the Notifications








