மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. ரூ.7000 விலையில் 50MP கேமராவுடன் 5G போன்.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான, ரெட்மி நிறுவனம் இப்போது மிக-மிக குறைந்த விலையில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போனை நிறுவனம் ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) என்ற பெயருடன் வெளியிடவுள்ளது. இந்த புதிய போன் பற்றிய தகவலை ரெட்மி நிறுவனம் அக்டோபர் 16, 2024 ஆம் தேதி உலகிற்கு காண்பித்தது. இதன் அறிமுகம் விரைவில் நடைபெறவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக இந்த போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளது.
ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) 6.7" இன்ச் அளவு கொண்ட HD+ IPS LCD டிஸ்பிளேவை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) கொண்ட டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய Redmi A4 5G குவால்காம் ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 4s Gen 2 chipset) உடன் வருமென்று கூறப்படுகிறது.

ரெட்மி A4 5ஜி சிறப்பம்சம் (Redmi A4 5G Specifications):
இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரூ. 10,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் சாதனமாக இருக்குமென்று கூறப்படுகிறது. ரூ. 10,000 செஜ்மெண்ட் சாதனமாக இருந்தாலும், இதன் அம்சங்களில் நிறுவனம் எந்தவித குறையையும் வைக்கவில்லை. இந்த ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) சாதனம் 50MP கொண்ட பிரைமரி கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
முன்பக்கத்தில், இந்த புதிய ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 8MP செல்பி கேமராவை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது. இந்த புதிய ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போனை நிறுவனம் ஆண்ட்ராய்டு 14 உடன் ஹைப்பர் ஓஎஸ் 1.0 (Android 14 with HyperOS 1.0) இயங்குதளத்தில் இயங்க கூடியதாக இருக்குமென்று கூறப்படுகிறது.
புதிய ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் (RAM) உடன் 128GB ஸ்டோரேஜ் (Storage) மாடலாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G) டிவைஸ் 5000mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது. இதன் விலை விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ரெட்மி A4 5ஜி விலை (Redmi A4 5G Price):
இந்த புதிய Redmi A4 5G ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடல் இந்திய சந்தையில் ரூ. 8499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விலையுடன் ரெட்மி நிறுவனத்தின் அறிமுக சலுகை ஆஃபரும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் இந்த போனின் விலை ரூ.7000 புள்ளிகளை நெருங்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








