Home
Mobile

வெறும் ரூ.5,647 போதும்.. 5000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. புதிய Redmi போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும் பல்வேறு புதிய அம்சங்கள் இதில் உள்ளன. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி ஏ3எக்ஸ் அம்சங்கள் (Redmi A3x specifications) : 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் (IPS LCD HD+) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate)மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ( Corning Gorilla Glass 3) ப்ரொடெக்ஷன், டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

வெறும் ரூ.5,647 போதும்.. 5000mAh பேட்டரி.. புதிய ரெட்மி போன் அறிமுகம்!

சக்திவாய்ந்த யுனிசாக் டி603 பிராசஸர் (Unisoc T603 processor) உடன் இந்த அசத்தலான ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8எம்பி டூயல் ஏஐ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (15W fast charging) வசதியும் உள்ளது.

வெறும் ரூ.5,647 போதும்.. 5000mAh பேட்டரி.. புதிய ரெட்மி போன் அறிமுகம்!

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி ஏ3எக்ஸ் போன்.

ஆனால் தற்போது ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரெட்மி ஏ3எக்ஸ் போனில் விலை $68(இந்திய மதிப்பில் ரூ.5,647)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3x with Unisoc T603 launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X