ரூ.4000 விலை குறைப்பு.. ரூ.5999 க்கு 8GB ரேம், 5000mAh பேட்டரி, கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது அதன் 2 ஆம் கட்ட 2025 சுதந்திர தின விற்பனையை (2025 Independence Day Sale) இந்த வாரம் தொடங்க உள்ளது. மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையானது ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கம் போல, இந்த விற்பனையிலும் பல்வேறு பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பலவற்றை தள்ளுபடி விலையில் வாங்கலாம். பிளிப்கார்ட்டின் டீஸர் போட்டோவானது - சாம்சங், மோட்டோரோலா, விவோ, ஆசஸ், ஹெச்பி, டிசிஎல் போன்ற பிராண்டுகளில் பெரிய தள்ளுபடி கிடைக்கும் என்று உறுதிப்படுத்துகிறது.

ஆனால் ஆகஸ்ட் 13 க்கு முன்பாகவே பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையின் கீழ் தான் வாங்க கிடைக்கிறது. அதிலொரு மாடல் தான் - ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி (Redmi A3X 4G) ஆகும். ரூ.6000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போனை (Best Entry Level 4G Smartphone Under Rs 6000) தேடும் பயனர்கள், ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனை நிச்சயம் கருத்தில் கொள்ளலாம்.
ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி அசல் விலை என்ன, ஆபர் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ரேம் + இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் எம்ஆர்பி விலை ரூ.9,999 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் வலைதளத்தில் தற்போது இது 40% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.4000 விலை குறைப்பை பெற்றுள்ளது.
ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.71-இன்ச் அளவிலான எச்டி பிளஸ் எல்சிடி டாட் டிராப் டிஸ்பிளேவை (HD Plus Dot Drop Display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது
ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக வலைத்தளத்தின்படி இந்த போன் 4ஜிபிவரையிலா LPDDR4X உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி603 (Unisoc T603) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதை 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் (8GB Virtual RAM) கொண்டு நீட்டிக்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128ஜிபி வரையிலான eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. கூடவே மைக்ரோஎஸ்டி கார்டு (MicroSD Card) வழியாக 1டிபி வரை விரிவாக்கம் செய்யவும் முடியும்
கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜிஸ் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா யூனிட்டை (Dual Rear Camera Unit) கொண்டுள்ளது. அதில் 8 மெகாபிக்சல் ப்ரைமரி ன்சார் உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 10W வயர்டு சார்ஜிங் ஆதரவை (Wired Charging Support) வழங்குகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.4 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி வசதி, 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் (AI Face Unlock) வசதியையும் கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 168.4 x 76.3 x 8.3மிமீ உள்ளது.


Click it and Unblock the Notifications








