Home
Mobile

சத்தியமா ரூ.5,700 தான்.. Redmi-யின் நம்ப முடியாத போன்.. 8GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 5,000mAh பேட்டரி.. என்ன மாடல்?

சூப்பர்- பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் என்று வந்துவிட்டால்.. அதாவது ரூ.7,000 க்குள் அல்லது ரூ.8,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் என்று வந்து விட்டால்.. சீன பிராண்ட் ஆன ரெட்மி (Redmi) நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். டாப் 10 பெஸ்ட் போன்கள் என்கிற லிஸ்ட் ஆக இருந்தாலும் சரி.. அல்லது டாப் 5 பெஸ்ட் போன்கள் என்கிற லிஸ்ட் ஆக இருந்தாலும் சரி.. அந்த பட்டியலில் நிச்சயம் 1 ரெட்மி ஸ்மார்ட்போன் இருக்கும்.

அப்படியான ரெட்மியின் சூப்பர்-பட்ஜெட் பிரிவை இன்னும் பலப்படுத்தும் படியான ஒரு பக்காவான ஸ்மார்ட்போன் கூடிய விரைவில், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதென்ன மாடல்? அது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

சத்தியமா ரூ.5,700 தான்.. Redmi-யின் நம்ப முடியாத போன்!

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஷாவ்மீயின் உலகளாவிய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக இது விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். ஷாவ்மீயின் உலகளாவிய இணையதளம் வழியாக ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முழுமையான அம்சங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? நினைவூட்டும் வண்ணம் சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் அறிமுகமானது. ஆனால் இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை. இது அறிமுகமானதும் ஏற்கனவே வாங்க கிடைக்கும் ரெட்மி ஏ3 மாடலுடன் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலைக்கு வரும்? ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் என்கிற இரண்டு ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்களில்.. மற்றும் அரோரா கிரீன், மிட்நைட் பிளாக் மற்றும் மிட்நைட் ஒயிட் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் ஷாவ்மீயின் உலகளாவிய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பாகிஸ்தானில் அறிமுகமாகி விட்டது. அங்கே இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.5,700 க்கு வாங்க கிடைக்கிறது. இதே மாதிரியான விலைப்புள்ளியில், கூடிய விரைவில் இந்தியாவிலும் இது அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்கும். இது 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டாகோர் யுனிசாக் டி603 சிப்செட், 4ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி eMMC 5.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

மேலும் இது பில்ட்-இன் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவுபடுத்தும் ஆதரவு, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவுபோனவைகளை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 8எம்பி + ஒரு QVGA சென்சார், முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, அது 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரெட்மி ஏ3 விலை விவரங்கள்: தற்போது இந்தியாவில் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 வகையான ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.6,999, 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.7,999, 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.8,999 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3x New Budget Phone Under Rs 8000 India Launch Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X