சைலெண்டாக அறிமுகமான புதிய Redmi போன்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3x) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, LCD டிஸ்பிளே, யுனிசாக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளியாகி உள்ளது. இப்போது ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி ஏ3எக்ஸ் அம்சங்கள் (Redmi A3x specifications) : 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் (IPS LCD HD+) டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) ப்ரொடெக்ஷன், டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

தரமான யுனிசாக் டி603 சிப்செட் (Unisoc T603 chipset) உடன் இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனில் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
8எம்பி மெயின் கேமரா + QVGA கேமரா என்கிற டூயல் ரியர் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் (10W charging) வசதியும் உள்ளது.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் ஏஐ ஃபேஸ் அன்லாக் ( AI face unlock), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி ஏ3எக்ஸ் போன்.
3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி ஏ3எக்ஸ் போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.7,999-ஆக உள்ளது. அமேசான் இந்தியா மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த போனை வாங்கலாம் மிட்நைட் பிளாக் (Midnight Black), ஓஷன் கிரீன் (Ocean Green), ஆலிவ் கிரீன் (Olive Green) மற்றும் ஸ்டார்ரி ஒயிட் (Starry White) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








