Home
Mobile

வெறும் ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் Redmi போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3x) போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் விலையும் வெளியாகி உள்ளது. அதேபோல் கடந்த மாதம் உலக சந்தையில் ரெட்மி ஏ3எக்ஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ரெட்மி ஏ3எக்ஸ போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி ஏ3எக்ஸ் அம்சங்கள் (Redmi A3x specifications) : தரமான யுனிசாக் டி603 பிராசஸர் (Unisoc T603 processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வெறும் ரூ.6,999 போதும்.. இந்தியாவுக்கு வரும் Redmi போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் (IPS LCD HD+) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். மேலும் 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate)மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ( Corning Gorilla Glass 3) ப்ரொடெக்ஷன், டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளது.

குறிப்பாக 3ஜிபி ரேம்+64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த போன் வெளிவரும்.

இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். 8எம்பி டூயல் ஏஐ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மேலும செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 8எம்பி ரியர் கேமரவுக்கு பதிலாக 13எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்(15W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வெறும் ரூ.6,999 போதும்.. இந்தியாவுக்கு வரும் Redmi போன்.. எந்த மாடல்?

அதேபோல் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி ஏ3எக்ஸ் போன்.

தற்போது அமேசான் தளத்தில் வெளியான தகவலின்படி, இந்த புதிய ரெட்மி ஏ3எக்ஸ் போன் ரூ.6,999 விலையில் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் உள்ளது. விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3X India price and specifications released: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X