Redmi அதகளம்.. வெறும் ரூ.5999 விலையில் தரமான Mobile.. இப்படி ஒரு போனுக்காக தானே காத்துகிட்டு இருந்தோம்..
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் ரெட்மி பிராண்டின் கீழ் ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3X) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்ச விபரங்கள் மற்றும் விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி நிறுவனம் அதன் A சீரிஸ் வரிசையில், புதிய பட்ஜெட் விருப்பமாக ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3X) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.71" இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3X):
இந்த புதிய ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3X) ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பட்ஜெட் விருப்பமாக அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் செக்மென்ட்டின் கீழ் என்னென்ன அம்சங்களை வழங்குகிறது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3X) ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்கள் இங்கே.
ரெட்மி ஏ3எக்ஸ் சிறப்பம்சம் (Redmi A3X Specifications):
- 6.71" இன்ச் அளவு கொண்ட எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (HD+ IPS LCD)
- 1650 x 720 பிக்சல் (pixels)
- 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு (Corning Gorilla Glass 3 protection)
- 1.8GHz ஆக்டா கோர் யூனிஸாக் டி603 சிப்செட் (Octa Core Unisoc T603 SoC)
- 6x Cortex-A55 and 2x Cortex-A75 கோர்
- 12nm பிராசஸர் (processor) உடன் மாலி ஜிபியு (Mali G57) MP1
- 3GB / 4GB LPDDR4X ரேம் (RAM)
- 64GB / 128GB eMMC 5.1 ஸ்டோரேஜ் (internal storage)
- 1TB வரை மைக்ரோஎஸ்டி மெமரி (microSD memory)
- ஆண்ட்ராய்டு 14 (Android 14)
- டூயல் சிம் (Dual SIM)
- நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி (nano + nano + microSD)
- 8MP ரியர் கேமரா (f/2.0 aperture)
- QVGA இரண்டாம் நிலை சென்சார் (secondary camera)
- எல்இடி பிளாஷ் (LED flash)
- 5MP செல்பி கேமரா (front-facing camera)
- 3.5mm ஆடியோ ஜாக் (audio jack)
- எஃப்எம் ரேடியோ (FM Radio)
- பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint scanner)
- டூயல் 4ஜி வோல்டி (Dual 4G VoLTE)
- Wi-Fi 802.11 b/g/n
- ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0)
- ஜிபிஎஸ் + க்ளோனஸ் (GPS + GLONASS)
- யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type- C port)
- 5000mAh பேட்டரி (battery)
- 10W சார்ஜிங் (charging)
இந்த புதிய ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3X) ஸ்மார்ட்போன் சாதனம் மிட்நைட் பிளாக் (Midnight Black), மூன்லைட் வைட் (Moonlight White) மற்றும் அரோரா க்ரீன் (Aurora Green) நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5999 என்ற விலை முதல் ரூ.7,000 விலை புள்ளிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications