Home
Mobile

Redmi-யின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. ரூ.4000 டிஸ்கவுண்ட்.. 8GB ரேம், 5000mAh பேட்டரி, கொரில்லா டிஸ்பிளே!

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறும்படியாக ரெட்மி நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.4000 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக யாரெல்லாம் இந்த தீபாவளிக்கு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்று திட்டமிட்டு உள்ளீர்களோ.. அவர்கள் எல்லோரும் உடனே பிளிப்கார்ட் தளத்திற்கு செல்லவும்

ஏனென்றால் பிளிப்கார்ட் பிக் பேங்க் தீபாவளி 2025 விற்பனையின் ஒரு பகுதியாகவே ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி (Redmi A3X 4G) ஸ்மார்ட்போன் மீது ரூ.4000டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி ஆன ரூ.9,999 க்கு பதிலாக ரூ.6,699 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Redmi-யின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. ரூ.4000 டிஸ்கவுண்ட்!

பிளிப்கார்ட்டின் மொபைல் ஆபர்கள் குறித்த பேனரில், இதே ஸ்மார்ட்போன் ரூ.5999 க்கு கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் ஆகிய கூடுதல் சலுகைகளை உள்ளடக்கிய விலையாக இருக்கலாம். இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் ஆப்ஷன் மீதும் ஆபர் கிடைக்கிறது. இது அதன் எம்ஆர்பி ஆன ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,290 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.71-இன்ச் அளவிலான எச்டி பிளஸ் எல்சிடி டாட் டிராப் டிஸ்பிளேவை (HD Plus Dot Drop Display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது

ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக வலைத்தளத்தின்படி இந்த போன் 4ஜிபி வரையிலான LPDDR4X உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி603 (Unisoc T603) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதை 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் (8GB Virtual RAM) கொண்டு நீட்டிக்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128ஜிபி வரையிலான eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. கூடவே மைக்ரோஎஸ்டி கார்டு (MicroSD Card) வழியாக 1டிபி வரை விரிவாக்கம் செய்யவும் முடியும்

கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜிஸ் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா யூனிட்டை (Dual Rear Camera Unit) கொண்டுள்ளது. அதில் 8 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 10W வயர்டு சார்ஜிங் ஆதரவை (Wired Charging Support) வழங்குகிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.4 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி வசதி, 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் (AI Face Unlock) வசதியையும் கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 168.4 x 76.3 x 8.3மிமீ உள்ளது.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வேறு என்னென்ன ரெட்மி ஸ்மார்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது?
1. ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி - ரூ.11,999
2. ரெட்மி 14சி 5ஜி - ரூ.8,999
3. ரெட்மி ஏ5 - ரூ.6,499
4. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி - ரூ.20,249
5. ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி - ரூ.23,249
6. ரெட்மி 14 சிவி - ரூ.30,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3X 4G Selling At Discounted Price in Flipkart Big Bang Diwali Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X