மிரளுது பட்ஜெட்.. ரூ.9,000 போதும்.. 8GB ரேம்.. 2டிபி மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.10000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு 8ஜிபி ரேம், 2டிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஏஐ கேமரா, 10W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட போன் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான பட்ஜெட்டில் ரெட்மி ஏ3 போன் வெளியாகயிருக்கிறது.
ரெட்மி ஏ3 அம்சங்கள் (Redmi A3 Specifications): இந்த ரெட்மி போனானது, 6.71 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு வருகிறது. இந்த ரெட்மி ஏ3 போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12என்எம் (Octa Core MediaTek Helio G36 12nm) வருகிறது. ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) சப்போர்ட் கொண்டுள்ளது.
ஐஎம்ஜி பவர்விஆர் ஜிபியு (IMG PowerVR GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த போனில் 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.
டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டுள்ளது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. இந்த ரெட்மி ஏ3 போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கேமரா வருகிறது.

அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த ரெட்மி ஏ3 போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஃஎப்எம் ரேடியோ (FM Radio), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது.
இதுவொரு 4ஜி வேரியண்ட்டாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. அதோடு வை-பை 803 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.
அதோடு 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சப்போர்ட் உள்ளது. மிட்நைட் பிளாக் (Midnight Black), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய 3 கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் கசிந்தவையே. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த ரெட்மி ஏ3 போனானது, மொராக்கோவில் ஏற்கனவே வெளியாகி விட்டது.
இந்த போனின் விலை ரூ.9,745ஆக இருக்கிறது. இப்போது, இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் இந்திய மார்கெட் வட்டாரங்களில் விலை குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. இதன் 64 ஜிபி வேரியண்ட் ரூ.7000 பட்ஜெட்டிலும், 128 ஜிபி வேரியண்ட் ரூ.9000 பட்ஜெட்டிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








