Home
Mobile

போட்டி போட்டு வாங்க போறாங்க! வெறும் ரூ.7,000-க்கு 12GB ரேம், 90Hz டிஸ்பிளே, சர்க்குலர் கேமரா, 5000mAh பேட்டரி!

உண்மையாவா? சூப்பர் பட்ஜெட் விலையில்.. அதாவது ரூ.10,000-க்குள் என்கிற விலையில் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் சேர்த்து மொத்தமாக 12ஜிபி ரேம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, சர்குலேர் டிசைனில் டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி-ஆ!

இப்படியாக கேட்பவர்களை வாய் பிளக்க வைக்கும் அம்சங்களுடன் ஒரு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது ரெட்மி ஏ3 (Redmi A3) ஸ்மார்ட்போனாகும். வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்திய கையோடு ரெட்மி நிறுவனமானது, ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனிற்கான புதிய லேண்டிங் பக்கத்தை (Landing Page) உருவாக்கியுள்ளது.

வெறும் ரூ.7,000-க்கு.. 12GB ரேம், 90Hz டிஸ்பிளே, சர்க்குலர் கேமரா!

அதன் வழியாக ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு எப்படி இருக்கும்? மற்றும் என்னென்ன முக்கிய பேக் செய்யும்? என்கிற விவரங்கள் பகிரப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை, ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஹாலோ டிசைன் (Halo design) உடன் வருகிறது. மேலும் தோல் அமைப்பு கொண்ட பேக் பேனலை (Leather textured back panel) கொண்டுள்ளது. அதில் ஒரு சர்க்குலர் வடிவமைப்பிலான டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Circular Design Dual Camera Setup) பார்க்க முடிகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனில் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவே உள்ளது. ஆக இதுவொரு நல்ல முன்னேற்றம் ஆகும்.

வெறும் ரூ.7,000-க்கு.. 12GB ரேம், 90Hz டிஸ்பிளே, சர்க்குலர் கேமரா!

இதுதவிர்த்து ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6ஜிபி "வழக்கமான" ரேம் மற்றும் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என மொத்தம் 12ஜிபி அளவிலான ரேம் கிடைக்கும். கடைசியாக இது யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் (USB Type-C Charging Port) ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும்.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது 13-மெகாபிக்சல் மெயின் கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 10W வயர்டு சார்ஜிங் ஆதரவு, 6.71 இன்ச் டிஸ்பிளே, 64ஜிபி / 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Androidd 13 Go Edition) போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

வெறும் ரூ.7,000-க்கு.. 12GB ரேம், 90Hz டிஸ்பிளே, சர்க்குலர் கேமரா!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.7000 முதல் ரூ.9000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ2 (Redmi A2) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.6,799 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக எப்படி பாத்தாலும் இது ரூ.7000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் இருக்கும். அதிகபட்சம் ரூ.7999 வரை செல்லலாம்.

ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷனின் கீழ் இயங்குகிறது. மேலும் 6.52-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி36 (MediaTek Helio G36) ப்ராசஸர் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் உடனான 8-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ஒரு க்யூவிஜிஏ (QVGA) சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3 with 90Hz Display 5000mAH battery Circular Dual Camera Launching in India on Feb 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X