நாளைக்கு லான்ச் ஆகும் புதிய ரெட்மி போன்.. ரூ.10,000 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனை நாளை (பிப்ரவரி 14) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி ஏ3 அம்சங்கள் (Redmi A3 specifications): 6.71-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி ஏ3 அறிமுகமாகும். மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் (400nits peak brightness), 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (120Hz touch sampling rate), கார்னிங் கொரில்லா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

மீடியாடெக் (MediaTek) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி ஏ3 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் (6ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இந்த போனில் உள்ளது.
ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் போன் 13எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh Battery) வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன். எனவே இந்த ரெட்மி ஏ3 போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

அதேபோல் டூயல்-சிம் (dual-SIM), 4ஜி (4G), வைஃபை 2.4ஜிகாஹெர்ட்ஸ் (WiFi 2.4GHz), புளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port), 3.5எம்எம் ஆடியோ ஜாக் ( 3.5mm audio jack) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன்.
இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் இந்த ரெட்மி ஏ3 போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications