Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. மலிவு விலை.. LCD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. வட்டவடிவ கேமராக்கள் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

அதேபோல் வரும் வாரங்களில் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த போன் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. மலிவு விலை.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?

ரெட்மி ஏ3 அம்சங்கள் (Redmi A3 specifications): தரமான மீடியாடெக் (MediaTek) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி ஏ3 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி eMMC 5.1 ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் 6.71-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் (400nits peak brightness), 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (120Hz touch sampling rate), கார்னிங் கொரில்லா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

13எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. மலிவு விலை.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh Battery) வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன். எனவே இந்த ரெட்மி ஏ3 போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

டூயல்-சிம் (dual-SIM), 4ஜி (4G), வைஃபை 2.4ஜிகாஹெர்ட்ஸ் (WiFi 2.4GHz), புளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port), 3.5எம்எம் ஆடியோ ஜாக் ( 3.5mm audio jack) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் ரூ.8,000 அல்லது ரூ.9,000 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3 live images released online: check specifications, price And More Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X