Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர் கன்ஃபார்ம்! வெறும் ரூ.5999-க்கு.. 6.52-இன்ச் டிஸ்பிளே, 7GB ரேம், 5000mAh பேட்டரி! என்ன மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கென இந்தியாவில் ஒரு தனி வாடிக்கையாளர் / ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த கூட்டத்தை மேலும் விரிவாக்கும் வண்ணம் ரெட்மி ஏ சீரிஸின் (Redmi A-series) கீழ் இன்னொரு அட்டகாசமான மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதென்ன மாடல்? ரெட்மியின் இந்த புதிய ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன் சரியாக எப்போது அறிமுகமாகும் (Launch Date)? இது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும் (Specifications)? இது இந்திய சந்தையில் என்ன விலைக்கு அறிமுகமாகும் (Price in India)? இதோ விவரங்கள்:

ஆளுக்கு 2 ஆர்டர் கன்ஃபார்ம்.. வெறும் ரூ.5,999-க்கு Redmi A3 வருதா?

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி ஏ3 (Redmi A3) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது கடந்த மே மாதத்தில், மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் (MediaTek Helio G36 SoC) உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி ஏ2 (Redmi A2) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக (Upgraded Version ) இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

எப்போது அறிமுகம்? ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி, அதன் புதிய ஏ சீரீஸ் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. இருப்பினும் இது பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியக (Bureau Of Indian Standards) இணையதளத்தில் காணப்பட்டுள்ளது.

ஆளுக்கு 2 ஆர்டர் கன்ஃபார்ம்.. வெறும் ரூ.5,999-க்கு Redmi A3 வருதா?

வழக்கமாக பிஐஎஸ் இணையதளத்தை கடந்த எந்தவொரு ஸ்மார்ட்போனுமே கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும். ஆக ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் எப்போது வேண்டுமானால் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போன் என்பிடிசி (NBTC), ஐஎம்டிஏ (IMDA) மற்றும் இஇசி (EEC) இணையதளங்களிலும் கூட காணப்பட்டுள்ளது. ஆக இது பல்வேறு ஆப்ஷன்களில் வரும் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? பெரும்பாலும் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது (சிப்செட் தவிர்த்து) ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனிடம் இருந்து பல அம்சங்களை கடன் வாங்கலாம். அதாவது ரெட்மி ஏ2 மாடலின் முக்கிய அம்சங்கள் ரெட்மி ஏ3 மாடலில் தக்கவைத்து கொள்ளப்படலாம் என்று அர்த்தம்.

ஆளுக்கு 2 ஆர்டர் கன்ஃபார்ம்.. வெறும் ரூ.5,999-க்கு Redmi A3 வருதா?

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன், 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (120Hz touch sampling rate) உடனான 6.52-இன்ச் எச்டி பிளஸ் (1600 x 720 பிக்ஸல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

4ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சமும் உள்ளது. இதன்கீழ் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து ரேம்-ஐ கடன் வாங்கி, அதை அதிகபட்சம் 7ஜிபி வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 8 மெகாபிக்சல் மெயின் கேமரா + க்யூவிஜிஏ (QVGA) செக்கண்டரி கேமரா உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

கடைசியாக ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டு இயங்கும் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேற்கண்ட அம்சங்களில் பெரும்பாலானவைகள் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம். இது எந்த சிப்செட் பேக் செய்கிறது என்பதை பொறுத்தே இதன் விற்பனை சூடுபிடிக்கும்.

என்ன விலைக்கு வரும்? அம்சங்களை போலவே ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை நிர்ண்யமும் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ2 மாடலின் பேஸிக் 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.5,999 க்கும், 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,499 க்கும், 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,499 க்கும் அறிமுகமானது.

இதேபோன்ற விலை நிர்ணயத்தை நாம் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம். அதாவது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.6000 பட்ஜெட்டில் இருக்கும். இந்த பட்ஜெட்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் இல்லை என்பதால்.. இது ரூ.6500 பட்ஜெட்டில் அறிமுகமானாலும் கூட, நிச்சயம் நல்ல அளவிலான விற்பனையை காணும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3 India Launch Soon Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X