Home
Mobile

இத எதிர்பார்க்கல.. கம்மி பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. வருகிறது புதிய ரெட்மி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் அடுத்து கம்மி விலையில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் ரெட்மி ஏ3 எனும் ஸ்மார்ட்போனை உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது வட்ட வடிவ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இத எதிர்பார்க்கல.. LCD டிஸ்பிளே.. வருகிறது ரெட்மி போன்.. எந்த மாடல்?

ரெட்மி ஏ3 அம்சங்கள் ( Redmi A3 specifications): 6.71-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் (400nits peak brightness), 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (120Hz touch sampling rate), கார்னிங் கொரில்லா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஆனது சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும். அதேபோல் சக்திவாய்ந்த மீடியாடெக் சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி போன் அறிமுகமாகும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் போன் ஆனது 13எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh Battery) வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன். எனவே இந்த ரெட்மி ஏ3 போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும்.

இத எதிர்பார்க்கல.. LCD டிஸ்பிளே.. வருகிறது ரெட்மி போன்.. எந்த மாடல்?

டூயல்-சிம், 4ஜி, வைஃபை 2.4ஜிகாஹெர்ட், புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடல். கருப்பு ( Black), நீலம் (Blue) மற்றும் பச்சை (Green) நிறங்களில் இந்தியாவுக்கு வரும் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.8000 அல்லது ரூ.9000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மலிவு விலையில் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A3 design and specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X