Home
Mobile

எழுதி வச்சுக்கோங்க இந்த Redmi ஸ்மார்ட்போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்! அப்படியென்ன ஸ்பெஷல்?

தற்போது டெக்னோ, மோட்டோரோலா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ரெட்மி நிறுவனமும் விரைவில் ஒரு அசத்தலான பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரெட்மி நிறுவனம் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக இந்த போன் முதலில் ஐரோப்பாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு மற்ற நாடுகளில் இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எழுதி வச்சுக்கோங்க இந்த Redmi ஸ்மார்ட்போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்

ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்
ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1600X720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

எழுதி வச்சுக்கோங்க இந்த Redmi ஸ்மார்ட்போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்

இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் 2ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.

அதேபோல் இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த போன் 8எம்பி கேமராவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். குறிப்பாக அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த புதிய ரெட்மி போன். அதேபோல் இந்த போன் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அமசங்களுடன் வெளிவரும்.

எழுதி வச்சுக்கோங்க இந்த Redmi ஸ்மார்ட்போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்

குறிப்பாக ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி இல்லை. அதற்குப் பதிலாக 4ஜி எல்டிஇ ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் விலை
குறிப்பாக இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் ரூ.9,500-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi A2 Smartphone Launching Soon Under Rs 9500: Full Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X