காத்திருந்தது போதும்! தேதி குறிச்சாச்சு! பட்ஜெட் விலையில் புதிய Redmi போன்களை வாங்க ரெடியாகுங்க!
ரெட்மி நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்தியாவில் ரெட்மி நிறுவனத்தின் போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி ஏ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது வரும் மே 19-ம் தேதி ரெட்மி ஏ2 மற்றும் ரெட்மி ஏ2 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தான் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி ஏ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன இந்த ரெட்மி ஏ2 மற்றும் ரெட்மி ஏ2 பிளஸ் போன்கள். பின்பு1600 x 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதேபோல் இந்த போன்களின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர் உடன் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட்போன்கள். எனவே இந்த ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன்கள் அறிமுகமாகும்.
புதிய ரெட்மி ஏ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்.
குறிப்பாக 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளன இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள். ஆனால் இந்த போன்கள் 13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் புதிய ரெட்மி ஏ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன்கள் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த போன்களின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4ஜி வோல்ட், வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய ரெட்மி ஏ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். மேலும் இந்த போன்கள் 192 கிராம் எடை கொணடுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரெட்மி ஏ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நீலம், பச்சை, கருப்பு நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த இரண்டு போன்களும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








