ரெட்மி ஏ2 சீரீஸ் இந்தியாவில் அறிமுகம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ!
சியோமி நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் ரெட்மி ஏ2 சீரிஸான #தேஷ்காஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரீஸ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மிகவும் விரும்பப்பட்ட ரெட்மி ஏ1 சீரீஸின் வாரிசாகும். சியோமி ரெட்மி ஏ2 சீரீஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது - ரெட்மி ஏ2 மற்றும் ரெட்மி ஏ2 பிளஸ். ரெட்மி ஏ2 சீரிஸின் விலை ரூ.5999 முதல் தொடங்குகிறது, இது வருகிற மே 23, 2023 முதல் அமேசான், எம்ஐ.காம், எம்ஐ ஹோம்ஸ் மற்றும் பார்ட்னர் ஸ்டோர்ஸ் வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும்.
ஆக்டா-கோர் ஹீலியோ ஜி36 ப்ராசஸர் மற்றும் 6.52-இன்ச் எச்டி பிளஸ் என்கிற பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளதால் ரெட்மி ஏ2 சீரீஸ் ஆனது தடையற்ற ப்ரவுஸிங் மற்றும் மல்டிமீடியா நுகர்வுக்கு தேவையான அனைத்து சக்தியையும் வழங்குகிறது. ரெட்மி ஏ2 சீரிஸ் 5000எம்ஏஎச் என்கிற மிகப்பெரிய பேட்டரியுடன் வருகிறது, அதனுடன் 10W இன்-பாக்ஸ் சார்ஜரும் வருகிறது, இது உங்கள் ஸ்மார்ட்போனை மணிக்கணக்கில் இயக்கத்தில் வைத்திருக்கும். மேலும் இதன் போன்கள் அதன் பின்புறத்தில் 8எம்பி டூயல் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 5எம்பி கேமராவையும் கொண்டுள்ளது.

சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும், ரெட்மி ஏ2 சீரிஸ் ஆனது தூய்மையான மற்றும் மென்மையான மென்பொருள் அனுபவத்தை வழங்குகிறது. சுவாரசியமாக இந்த போன்கள் 7ஜிபி வரையிலான கூடுதல் விர்ச்சுவல் ரேம் ஆதரவுடனும் வருகிறது, இது விரைவான செயலாக்கத்தையும் சிறந்த மல்டிடாஸ்கிங்கையும் உறுதி செய்கிறது.
கைரேகைகளால் ஏற்படும் கறைகளை எதிர்க்கும் தனித்துவமான மற்றும் நேர்த்தியான லெதர் டெக்ஷர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் அவற்றின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் நிரம்பிய செயல்திறனால் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. இது மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது: சீ கிரீன், அக்வா ப்ளூ, கிளாசிக் பிளாக்.
கூடுதலாக, ரெட்மி ஏ2 பிளஸ் மாடலில், அதிவிரைவான மற்றும் பாதுகாப்பான அன்லாக்கிங்கிற்காக மேம்பட்ட மற்றும் வேகமாக பதிலளிக்கக்கூடிய ரியர் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி ஏ2 சீரீஸ் மூலம், நீங்கள் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை பெறுவது மட்டுமல்லாமல், 2 வருட உத்தரவாதத்துடன் "ரெட்மி கா டபுள் பரோசா" உத்தரவாதத்தையும் பெறுவீர்கள்.


Click it and Unblock the Notifications








