இன்று 1 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க- க்ளீன் அம்சத்துடன் வெளியாகும் Redmi A1!

|

Redmi A1 ஸ்மார்ட்போன் வெளியீட்டுத் தேது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளீன் ஆண்ட்ராய்ட் அனுபவத்தை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

க்ளீன் அனுபவம் வழங்கும் ஸ்மார்ட்போன்

க்ளீன் அனுபவம் வழங்கும் ஸ்மார்ட்போன்

பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தாலும், ரெட்மி ஸ்மார்ட்போனுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

கடைக்கு சென்றாலும் சரி, ஆன்லைன் விற்பனை தளத்துக்கு சென்றாலும் சரி முதலில் ரெட்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் என்ன என்று சோதித்துவிட்டு பிற ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் ஏராளம்.

இந்த நிலையில் ரெட்மி நிறுவனம் க்ளீன் அனுபவம் வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை நாளை(செவ்வாய் கிழமை) அறிமுகம் செய்ய இருக்கிறது.

டூயல் ரியர் கேமரா அமைப்பு

டூயல் ரியர் கேமரா அமைப்பு

ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக Redmi A1 சிறப்பம்சங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

Redmi A1 ஆனது LED ப்ளாஷ் உடனான டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Redmi A1 வெளியீட்டு தேதி

Redmi A1 வெளியீட்டு தேதி

Redmi A1 வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மீடியாடெக் சிப்செட் பெயர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

டூயல் ரியர் கேமரா அமைப்பு

டூயல் ரியர் கேமரா அமைப்பு

Redmi A1 ஸ்மார்ட்போனானது க்ளீன் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புற புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் டூயல் ரியர் கேமரா அமைப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் அதே நேரத்தில் இதன் பின்புற பேனல் லெதர் அமைப்புடன் இருக்கும் எனவும் டீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும்

செப்டம்பர் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும்

Xiaomi இன் துணை நிறுவனமான ரெட்மி ட்விட்டர் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. ரெட்மி ஏ1 ஆனது இந்தியாவில் செப்டம்பர் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வெளியீடுக்கான பிரத்யேக லேண்டிங் பக்கம் நிறுவனத்தின் இணையதளத்தில் தற்போதே நேரலையில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் க்ளீன் ஆண்ட்ராய்டு ஓஎஸ், 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் எஸ்ஓசி கொண்டிருக்கும் என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது.

டூயல் ரியர் ஏஐ கேமரா அமைப்பு

டூயல் ரியர் ஏஐ கேமரா அமைப்பு

Redmi A1 ஆனது எல்இடி ப்ளாஷ் உடனான டூயல் ரியர் ஏஐ கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும், பின்பேனல் லெதர் அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பத்தில் வெளியாகலாம். இதன் இந்திய விலை உட்பட விவரங்களை ரெட்மி வெளியிடவில்லை.

ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸ்

ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸ்

முன்னதாக வெளியான தகவலின்படி, ரெட்மி ஏ1 ஆனது US Federal Communications Commission (FCC) தரவுத்தளத்திலும், Geekbench இணையதளத்திலும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

மீடியாடெக் எஸ்ஓசி மூலம் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டாலும் இந்த சிப்செட் பெயர் என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் இந்த சிப்செட் MediaTek Helio A22 SoC ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் எனவும் 3ஜிபி ரேம்மை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இன்று 1 நாள் மட்டும் காத்திருங்கள்

இன்று 1 நாள் மட்டும் காத்திருங்கள்

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால் இன்று 1 நாள் மட்டும் காத்திருங்கள், நாளை ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியாகிறது என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டுவிட்டது.

இந்த ஸ்மார்ட்போன் Diwali With MI (me) அறிமுகத்தின் ஒரு பகுதியாக வெளியாகிறது. அதேபோல் அறிமுகம் குறித்த நிறுவனத்தின் ட்வீட்டில் Made in India எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் லுக் நன்றாகவே இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் சிப்செட், டூயல் ரியர் கேமரா என வெளியான அம்சங்களை அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது.

பிற அம்சங்கள் மற்றும் முழு தகவலை நாளை அறிமுகத்தின் போது விரிவாக அறிந்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Redmi A1 smartphone will be launched on September 6: Clean Android Experience

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X