2 வாரத்தில் இப்படி ஒரு சேஞ்-ஆ.! புது அம்சத்துடன் Redmi A1+ அறிமுகம்.! என்ன சேஞ் தெரியுமா?

|

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி, இப்போது இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மடலை நிறுவனம் Redmi A1+ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

சிலருக்கு, இந்த மாடல் பெயரை கேட்டவுடனேயே இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.! என்று யோசிப்பீர்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் ரெட்மி நிறுவனம் Redmi A1 என்ற மாடலை அறிமுகம் செய்தது.

Redmi A1+ இந்தியாவில் அறிமுகம்.! என்ன ஸ்பெஷல்?

Redmi A1+ இந்தியாவில் அறிமுகம்.! என்ன ஸ்பெஷல்?

அந்த புதிய ரெட்மி A1 தொடரில் (Redmi A1 Series) சேரும் இரண்டாவது ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட A1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் மாடலாக இந்த A1+ இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் இரண்டே வாரத்தில், ரெட்மி இந்த புதிய ரெட்மி A1+ (Redmi A1+) மாடலில் என்ன மாற்றங்களை மேற்கொண்டுள்ளது , இதன் விலை என்ன? முந்தைய மாடலில் இருந்து இதன் சிறப்பம்சம் எப்படி வேறுபடுகிறது என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம் வாங்க.

Redmi A1+ மாடலில் என்ன புதிதாக மாற்றப்பட்டுள்ளது?

Redmi A1+ மாடலில் என்ன புதிதாக மாற்றப்பட்டுள்ளது?

Redmi A1+ மாடலில் ரெட்மி நிறுவனம் புதிதாக பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரைச் (Finger Print Scanner) சேர்த்துள்ளது. Redmi A1+ மற்றும் Redmi A1 ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு இதுவாகும்.

Redmi A1 சீரிஸ் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் வாங்கத் துடிக்கும் என்ட்ரி லெவல் (Entry level smartphone) பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவும் நோக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு 5G வந்துடுச்சு.! ஓகே.! எங்க போனுக்கு எப்போப்பா வரும்? இதோ முழுத் தகவல்.!இந்தியாவிற்கு 5G வந்துடுச்சு.! ஓகே.! எங்க போனுக்கு எப்போப்பா வரும்? இதோ முழுத் தகவல்.!

மலிவு விலையில் பெஸ்டான போனா இந்த Redmi A1+ போன்?

மலிவு விலையில் பெஸ்டான போனா இந்த Redmi A1+ போன்?

இந்த புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனான Redmi A1+ போன் ஹூட்டின் கீழ் MediaTek சிப்செட் உடன் வருகிறது. இந்த Redmi A1+ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

மலிவு விலையில் இவையெல்லாம் பெஸ்டான விஷயங்களாகும். சரி, இந்த போனின் முழுமையான சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Redmi A1+ ஸ்மார்ட்போன் 720 x 1600 பிக்கல்கள் உடன் கூடிய HD+ தீர்மானம் கொண்ட 6.52' இன்ச் IPS LED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

புதிய Redmi A1+ டிவைஸ் சிறப்பம்சம்

புதிய Redmi A1+ டிவைஸ் சிறப்பம்சம்

இது ஒரு பட்ஜெட் ஃபோன் என்பதால், A1+ ஆனது நிலையான 60Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது.

இது 20:9 விகிதத்தையும், முன்பக்க கேமராவிற்காக மேலே ஒரு வாட்டர் டிராப் நாட்சையும் கொண்டுள்ளது.

புதிய Redmi A1+ டிவைஸ் MediaTek Helio A22 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதில் 3ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32ஜிபி வரை செல்கிறது.

கூடுதல் ஸ்டோரேஜ் ஆக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை ஆதரிக்கிறது.

இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!

Redmi A1+ கேமரா மற்றும் பேட்டரி அம்சம்.!

Redmi A1+ கேமரா மற்றும் பேட்டரி அம்சம்.!

Redmi A1+ பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் Redmi A1 மாடலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Redmi A1+ ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 8MP பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்பைக் (dual camera setup) கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8MP கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 12 (Go Edition) இல் இயங்குகிறது.

Redmi A1+ விலை மற்றும் விற்பனை

Redmi A1+ விலை மற்றும் விற்பனை

Xiaomi இந்தியாவில் Redmi A1+ ஸ்மார்ட்போனை இரண்டு ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படை மாடல் 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ.6,999 என்ற விலையில் வருகிறது.

அதேபோல், இதன் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999 ஆக இருக்கிறது. இவை க்ரீன், ப்ளூ, மற்றும் பிளாக் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும்.

Redmi A1+ டிவைஸ் Mi.com, Mi Home Stores, Amazon மற்றும் ரீடெய்ல் பார்ட்னர்கள் வழியாக அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi A1+ Launched a New Budget Smartphone in India With Fingerprint Scanner

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X