அறிமுகத்திற்கு முன்பே ரெட்மி 9ஐ விலை லீக்: ரொம்ப கம்மி விலை!

|

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பாகவே ரெட்மி 9ஐ விலை லீக்காகியுள்ளது.

ரெட்மி 9 ஐ ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஐ ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஐ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15ஆம் தேதி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த ஸ்மாரட்போன் விலை வெளியாகியுள்ளது. ரெட்மி 9i ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் மூலம் பயனர்களுக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம்

ரெட்மி 9 ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கசிவு தகவல்களின்படி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தோடு ரூ.7,999 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்டின் விலை இதுவரை வெளியாகவில்லை. இந்த சாதனம் மிட்நைட் பிளாக், சீ ப்ளூ மற்றும் நேச்சர் கிரீன் ஆகிய கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

ரெட்மி 9i எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி 9i எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

எம்ஐ இந்தியாவின் ரெண்டர் இமேஜ் மூலம் அறிமுகம் செய்யப்படும் ரெட்மி 9 ஐ, இந்த தொடர் ரெட்மி 9 க்கு ஒத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

6.53 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

6.53 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனானது 6.53 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காட்சி 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

முதியவரின் வங்கி கணக்கில் ரூ.6 கோடி மோசடி செய்த 17 வயது சிறுவன்.! நடந்தது இதுதான்.!முதியவரின் வங்கி கணக்கில் ரூ.6 கோடி மோசடி செய்த 17 வயது சிறுவன்.! நடந்தது இதுதான்.!

 இணைப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்

இணைப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்

சமீபத்திய MIUI 12 இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தகவல்களின்படி, ரெட்மி 9i 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு அம்சங்களுடன் கிடைக்கும். ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 மதியம் 12 மணிக்கு

செப்டம்பர் 15 மதியம் 12 மணிக்கு

ரெட்மி 9 ஐ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு செப்டம்பர் 15 மதியம் 12 மணிக்கு தொடங்கும். வெளியீட்டு நிகழ்வில் மற்ற அனைத்து முக்கிய சிறப்பம்சங்களும் வெளியாகும். சியோமி தொடர்ந்து தனது பட்ஜெட் விலை போனை அறிமுகப்படுத்தி இந்திய சந்தையில் தனது கொடியை நிலைநாட்டி வருகிறது.

Best Mobiles in India

English summary
Redmi 9i Price Leaked Online in India Ahead of Launch Date

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X