Home
Mobile

ரொம்ப கம்மி விலை: ரூ.6,799-க்கு Redmi 9A இன்றுமுதல் விற்பனை., அட்டகாச சிறப்பம்சங்கள்!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன் பக்கா பட்ஜெட் விலையில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களிலும் 13 எம்பி பிரதான கேமராவோடு விற்பனைக்கு வருகிறது.

இன்றுமுதல் விற்பனை

இன்றுமுதல் விற்பனை

சியோமி நிறுவனத்தின் ரெட்மி தனது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்றுமுதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் எம்ஐ.காம் மூலம் இன்று 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம்

2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம்

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியானது. 2ஜிபி ரேம் மாடல் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.6,799-க்கும், மேலும் 3ஜிபி ரேம் மாடல் வேரியண்டின் விலை ரூ.7,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் ப்ளாக், கடல் ப்ளூ, நேட்சூர் க்ரீன் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி உடன் IMG PowerVR GE8320 GPU இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

13எம்பி பிரதான கேமரா

13எம்பி பிரதான கேமரா

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்தது. ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதிக நேரம் பயன்படுத்த முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

ப்ளூடூத் 5, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் + க்ளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Redmi 9A Smartphone First Sale Start in Inda Via Amazon and mi.Com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X