Redmi 9A ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடல் அறிமுகம்! என்ன விலை தெரியுமா?
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பட்டியலில் தற்பொழுது ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடலாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய ரெட்மி 9A ஸ்மார்ட்போன் மாடல் தற்பொழுது சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 4 ஜிபி + 64 ஜிபி, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி என மூன்று வேரியண்ட் மாடல்கள் கிடைக்கிறது.

புதிய ரெட்மி 9A ஸ்மார்ட்போனில், 6.53' இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 உடன் கூடிய இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. நீடுது நிலைக்கும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக இந்த மாடல் ரூ. 10,900 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெட்மி 9A சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி
- மைக்ரோ எஸ்.டி கார்டு வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைபை
- ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 10W சார்ஜிங்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி



Click it and Unblock the Notifications