Home
Mobile

Redmi ருத்ர தாண்டவம்.. 100W சார்ஜிங், 9000mAh பேட்டரி உடன் புதிய போன்.. என்ன மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனம் ஆனது மார்கெட்டில் உள்ள மற்ற "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போன்களுடன் போட்டிபோட முடிவு செய்து விட்டது போல் தெரிகிறது. ரெட்மி நிறுவனம் ஆனது 9000mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அது ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Turbo Turbo 5 Max) ஸ்மார்ட்போன் ஆகும். ரெட்மி டர்போ 5 மேக்ஸ்-ன் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளிப்படுத்தப்படாத நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் பேட்டரி கெப்பாசிட்டி குறித்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

100W சார்ஜிங், 9000mAh பேட்டரி உடன் புதிய Redmi போன்.. என்ன மாடல்?

ரெட்மி டர்போ 5 மேக்ஸ் டிசைன்: இந்த ஸ்மார்ட்போன் 4 பக்கங்களிலும் வட்டமான விளிம்புகள் மற்றும் மெல்லிய பெசல்களுடன் கூடிய பெரிய ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. ரியர் பேனலில் ஆனது முந்தைய ஜெனரேஷன் மாடலை போலவே செங்குத்தான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன ஒட்டுமொத்த இந்த வடிவமைப்பு - முன்னதாக வந்த மாடலுடன் அதிகம் ஒத்துப்போகிறது, ஆனால் மிகவும் நேர்த்தியாக தெரிகிறது.

ரெட்மி டர்போ 5 மேக்ஸ் பேட்டரி கெப்பாசிட்டி: இது மிகப்பெரிய 9000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிராண்ட் இந்த ஸ்மார்ட்போனின் பாஸ்ட் சார்ஜிங் திறன்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போனின் 3சி சான்றிதழ் ஏற்கனவே 100W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்க வாய்ப்பில்லை.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது முற்றிலும் புதிய டிமன்சிட்டி 9500எஸ் (Dimensity 9500s) சிப்செட்டை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 உடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா விவரங்கள் குறித்து பெரிய தகவல்கள் இல்லை. முன்னதாக வந்த மாடலை போலவே 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சீனாவில் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் மாடலாக அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி மாடலை தொடர்ந்து இந்த போக்கோ மாடல் நடப்பு காலாண்டிற்குள் உலகளவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன்: ரெட்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ரெட்மி நோட் 15 5ஜி மாடல் ஆனது கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த விலை - வங்கி தள்ளுபடியை உள்ளடக்கிய விலை நிர்ணயம் ஆகும். அதாவது மேற்கண்ட ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் அசல் அறிமுக விலை முறையே ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஷாவ்மீ வலைத்தளம், பிளிப்கார்ட், அமேசான் இந்தியா ஆகிய தளங்களின் வழியாக வாங்க கிடைக்கிறது.

ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108-மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் ரியர் கேமராக்கள் 4K 30 fps வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் செல்பீ கேமரா 1080p 30 fps ரெக்கார்டிங்கை வழங்கும். பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5,520mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 9000mAh Battery Phone Redmi Turbo 5 Max Design revealed 100W Charging confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X