மலிவு விலையில் 4 கேமராவுடன் கூடிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் இப்பொது விற்பனையில்! மிஸ் பண்ணாதீங்க!
சியோமியின் நிறுவனம் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி 9 பிரைம் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்பொழுது இந்த புதிய ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனத்தை எங்கு வாங்கலாம், எப்படி வாங்கலாம் என்று பார்க்கலாம்.

புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று மதியம் 12 மணி முதல் சியோமியின் மி.காம், அமேசான்.இன் மற்றும் பிளிப்கார்ட்.காம் ஆகியவற்றில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வெறும் ரூ .9,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது, இது ரெட்மி 9 இன் உலகளாவிய மாறுபாட்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

ரெட்மி 9 பிரைம் வேரியண்ட் விலை
புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று இரண்டு வேரியண்ட் வகையில் விற்பனைக்கு வருகின்றன, அதில் முதலாவது மாடல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்தில் வெறும் ரூ .9,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ .11,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு மாடல்களும் 5020 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வருகிறது.

4 வண்ணங்களில் கிடைக்கிறது
புதிய ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் ப்ளூ, மின்ட் கிறீன், சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. ரெட்மி 9 பிரைம் போன், 6.53' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், 400 நிட்களின் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. சியோமி நிறுவனம் ரெட்மி 9 பிரைமின் வடிவமைப்பை "ஆரா 360" என்று அழைக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான சிற்றலை அமைப்பு மற்றும் 3 டி யூனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

குவாட் ரியர் கேமரா
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80பிரசசர், மாலி-ஜி 52 ஜி.பீ. சேமிப்பகம், கூடுதல் ஸ்டோரேஜ் பயனிற்கு மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. ரெட்மி 9 பிரைமின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi 9 பிரைம் சிறப்பம்சம்
- 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட டார்க் மோடு இயங்குதளம்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
- 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 ஜிபியு
- 4 ஜிபி எல்பிடிடிஆர்எக்ஸ் ரேம் 128 ஜிபி சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுடன் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
- குவாட் கேமரா அமைப்பு
- 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
- 5 மெகா பிக்சில் கொண்ட மேக்ரோ கேமரா
- 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
- 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5020 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications