இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி 9 பிரைம்.! விலை இவ்வளவு தான்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவமனா ரெட்மி அன்மையில் ரெட்மி 9பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இன்று இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் மி.காம் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன், உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போன் ஆகும், இது 4 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை
விரிவாக்கக்கூடிய சேமிப்புடன் வருகிறது. சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று அதன் பெரிய பேட்டரி 5020 எம்.ஏ.எச் ஆகும்.
ரெட்மியிலிருந்து வரும் பிரைம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இது மிகப்பெரிய பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 9 பிரைமின் அனைத்து விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மையை இப்பொழுது முழுமையாக பார்க்கலாம். சியோமி ரெட்மி 9 பிரைம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் மிரட்டலான குவாட் கேமரா அமைப்புடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது. இதன் முழு விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

Redmi 9 பிரைம் சிறப்பம்சம்
- 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட டார்க் மோடு இயங்குதளம்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
- 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 ஜிபியு
- 4 ஜிபி எல்பிடிடிஆர்எக்ஸ் ரேம் 128 ஜிபி சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுடன் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
- குவாட் கேமரா அமைப்பு
- 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
- 5 மெகா பிக்சில் கொண்ட மேக்ரோ கேமரா
- 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
- 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5020 எம்ஏஎச் பேட்டரி


ரெட்மி 9 பிரைம் விலை
ரெட்மி 9 பிரைமின் அடிப்படை வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் வெறும் ரூ .9,999 என்ற விலையில் வந்துள்ளது. இதன் இரண்டாவது
வேரியண்ட் மாடலான 4 ஜிபி + 128 ஜிபி மாடல் வெறும் ரூ .11,999 என்ற விலையில் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் ப்ளூ,
மிண்ட் கிரீன், சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








