Home
Mobile

ரூ.8,999 மட்டுமே இன்று மதியம் 12 மணிக்கு: மூன்று கேமராவோடு Redmi 9 Prime, Redmi 9 விற்பனை!

ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மாரட்போனானது அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9

ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9

ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் எம்ஐ.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது. ரெட்மி 9 பிரைம் ஹீலியோ ஜி 80 SoC செயலி மற்றும் ரெட்மி 9 மீடியா டெக் ஹீலியோ ஜி 35 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 9 பிரைம் 5,020 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு உள்ளது. ரெட்மி 9., 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதேபோல், ரெட்மி 9 பிரைம் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பையும், ரெட்மி 9 டிரிபிள் கேமரா அமைப்பையும் கொண்டிருக்கிறது.

ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9 ஸ்மார்ட்போன்கள் விலை:

ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9 ஸ்மார்ட்போன்கள் விலை:

ரெட்மி 9 பிரைம் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ .9,999 எனவும் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ .11,999 எனவும் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மேட் பிளாக், இலைவகை பச்சை, ஸ்பேஸ் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ஃப்ளேர் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களானது, அமேசான் மற்றும் எம்ஐ.காம் மூலம் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

அமேசான் மற்றும் எம்ஐ.காம்

அமேசான் மற்றும் எம்ஐ.காம்

ரெட்மி 9 இன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ .8,999 எனவும் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ .9,999 எனவும் விற்பனைக்கு வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனானது கார்பன் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்போர்டி ஆரஞ்சு போன்ற வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது. இது அமேசான் மற்றும் எம்ஐ.காம் மூலமாகவும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வருகிறது. விலையில்ல இஎம்ஐ மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் இதில் கிடைக்கிறது.

ரெட்மி 9 பிரைம்: அம்சங்கள்

ரெட்மி 9 பிரைம்: அம்சங்கள்

ரெட்மி 9 பிரைம் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறையில் MIUI 11 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) தீர்மானத்தோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சோசி செயலி 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பிரைம் 128 ஜிபி வரை உள்சேமிப்புடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கப்படலாம்.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

ரெட்மி 9 பிரைமுக்கு குவாட் ரியர் கேமரா அமைப்பு 13 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டர், 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். செல்பி எடுப்பதற்கு 8 மெகாபிக்சல் கேமரா வசதி இதில் உள்ளது. ரெட்மி 9 பிரைம் 5,020 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரெட்மி 9: அம்சங்கள்

ரெட்மி 9: அம்சங்கள்

6.53 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டாட் டிராப் டிஸ்ப்ளே, பின்புற கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 9 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை) தனி ஸ்லாட் வழியாக விரிவாக்கப்படலாம்.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

ரெட்மி 9 இரட்டை பின்புற கேமரா அமைப்பு, 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் கொண்டுள்ளது. ரெட்மி 9 செல்ஃபி வசதிக்கென 5 மெகாபிக்சல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. ரெட்மி 9 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 10W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ரெட்மி 9 பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 9 Prime, Redmi 9 Going Sale Start in India at 12 PM Today Via Amazon, Mi.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X