ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் மாடலுக்கு ரூ.500 விலை குறைக்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில்

விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்ட புதிய விலைகளில் அமேசான் மற்றும் மி.காம் தளங்களில் ஸ்மார்ட்போனை

வாங்க முடியும்.

 உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போன்

உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன், உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போன் ஆகும், இது 4 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்புடன் வருகிறது. சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று அதன் பெரிய பேட்டரி 5020 எம்.ஏ.எச் ஆகும். ரெட்மியிலிருந்து வரும் பிரைம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இது மிகப்பெரிய பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான Mi நெக்பேண்ட் புளூடூத் இய்ரபோன்ஸ் ப்ரோ அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?

ச் கொண்ட முழு எச்

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்பேஸ் ப்ளூ, மின்ட் கிறீன், சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. ரெட்மி 9 பிரைம் போன், 6.53' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், 400 நிட்களின் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. சியோமி

நிறுவனம் ரெட்மி 9 பிரைமின் வடிவமைப்பை "ஆரா 360" என்று அழைக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான சிற்றலை அமைப்பு மற்றும் 3 டி யூனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட், மாலி-ஜி 52 ஜி.பீ. சேமிப்பகம், கூடுதல் ஸ்டோரேஜ் பயனிற்கு மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. ரெட்மி 9 பிரைமின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi 9 பிரைம் சிறப்பம்சங்கள்

Redmi 9 பிரைம் சிறப்பம்சங்கள்

 • 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
 • அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட டார்க் மோடு இயங்குதளம்
 • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
 • 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 ஜிபியு
 • 4 ஜிபி எல்பிடிடிஆர்எக்ஸ் ரேம் 128 ஜிபி சேமிப்பு
 • மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுடன் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
 • குவாட் கேமரா அமைப்பு
க்சல் கொண்ட
 • 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா
 • 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
 • 5 மெகா பிக்சில் கொண்ட மேக்ரோ கேமரா
 • 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
 • 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • 5020 எம்ஏஎச் பேட்டரி

News Source: gadgetsnow.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi 9 Prime Price Slashed in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X