6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் அடுத்த வருடம் முதல் மாதம் தனது புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ரெட்மி 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது.

6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக விரைவில் வெளிவரும் இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால், கண்டிப்பாக அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரெடமி 9 ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அந்த குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.!

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் அனைவரும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி70எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் வெளிவரும் இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போனில 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல் சிம், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Redmi 9 Powered By MediaTek Helio G70 To Launch In Early 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X