Home
Mobile

ரூ.10,999 மட்டுமே: 4ஜிபி ரேம் வசதியோடு ரெட்மி 9 பவர் விற்பனை தொடக்கம்!

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் வசதியோடு 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.10,999 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.11,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 பவர் விற்பனை தொடக்கம்

ரெட்மி 9 பவர் விற்பனை தொடக்கம்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் எம்.காம் மூலமாக விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் ஆஃப்லைன் தளங்கள் என்று பார்க்கையில் எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டூடியோ மற்றும் எம்ஐ ஸ்டோர்களில் ரெட்மி 9 பவர் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், ஃபியரி ரெட், எலெக்ட்ரிக் க்ரீன் மற்றும் ப்ளேஜிங் பச்சை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இதில் பாதுகாப்பு வசதிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது.

64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகள்

64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகள்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகளில் கிடைக்கும். இதில் ஸ்னாப்டிராகன் 662 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

சியோமி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதை சார்ஜ் செய்வதற்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவு, ப்ளூடூத் 5 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 9 Power Smartphone Sale Start Today in India: Here the Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X