Home
Mobile

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான வடிவமைப்புடன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

வெளிவந்த தகவலின்படி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதிகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Redmi 9 Power May Launching Soon in India: Here the Price and Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X